1,372 ரோபோ ஒரே இடத்தில் நடனம் : புதிய கின்னஸ் சாதனை!!

Read Time:2 Minute, 24 Second

ஒரே இடத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தாலியில் நடந்த இந்த நிகழ்வு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு பணியிலும் ரோபோக்களை பயன்படுத்திப் பார்க்கும் ஒத்திகை முயற்சிகள் உலகம் எங்கும் நடைபெற்று வருகின்றன. ராணுவம், மருத்துவம் மட்டுமல்லாமல் வீட்டு வேலைக்கு கூட ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ரோபோக்களை நடனமாட வைக்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான நடன அசைவுகளை கொண்டு பாடலுக்கு ஏற்ப ரோபோக்களை நடனமாட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

2016ல் சீனாவின் அப்டெக் என்ற நிறுவனம் ஒரே மாதிரி நடனமாடும் ரோபோக்களை காட்சிப்படுத்தி புதிய சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மீண்டும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனா 1069 சிறிய அளவிலான ரோபோக்களை ஒரே இடத்தில் நிறுத்தி நடனமாட வைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்தது. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் 1,372 ரோபோக்கள் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை அமைப்பின் நிர்வாகி லாரன்சோ வெல்ட்ரி பங்கேற்றார். மேலும் அனைத்து ரோபோக்களும் நடனமாடும் காட்சியும் வீடியோ எடுக்கப்பட்டது. அங்கு இசைக்கு ஏற்றார் போல் 1372 ரோபோக்களும் விதவிதமான நடன அசைவுகளை ஒரே மாதிரி செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. இது புதிய கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த ரோபோ நடனம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணினியில் கணக்கு எழுதலாம்! கைநிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)
Next post வெறும் குடிநீரை மருத்துவ நீராக மாற்றலாம்!(மருத்துவம்)