எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் பஸ்- கார்கள் மீது ரெயில் மோதி 40 பேர் பலி

Read Time:1 Minute, 24 Second

எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. அங்குள்ள ஒரு ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து கேட்டின் இரு பக்கமும் ஏராளமான பஸ்கள் மற்றும் கார்கள் வரிசையாக காத்து நின்றன. அப்போது வேகமாக வந்த ஒரு லாரி வரிசையாக நின்ற கார்கள் மற்றும் பஸ்கள் மீது பயங்கரமாக மோதியது. லாரி மோதிய வேகத்தில் கார்கள் மற்றும் பஸ்கள் நகர்ந்து தண்டவாளத்தில் போய் நின்றன. அந்த நேரம் பார்த்து ஒரு ரெயில் வேகமாக வந்தது. தண்டவாளத்தின் மீது நின்ற கார்கள் மற்றும் பஸ்கள் மீது மோதியது. பஸ்களும், கார்களும் சுக்கு நூறாக நொறுங்கின. பஸ் மற்றும் கார்களில் இருந்த 40 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் நைல் நதிக்கரை அருகே இதே போன்று விபத்தில் 58 பயணிகள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபியின்) உள் முரண்பாடுகளும், தீர்க்கத் தெரியாமல் தவிக்கும் நலன் விரும்பிகளும்..
Next post தொடராக திருடிவந்த பன்னிரண்டு வயதுடைய இரு சிறுவர்கள் பதுளையில் கைது