மட்டக்களப்பு இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய மனித புதைகுழியொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

Read Time:2 Minute, 24 Second

மட்டக்களப்பிலிருந்து 6கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாலமீன்மடு என்ற கடற்கரைக் கிராமத்தில் பாரிய மனித புதைகுழியொன்று இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது திருகோணமலை மூதூர் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாலமீன்மடு கிராமத்தில் குடியமர்த்தப் பட்டுள்ளனர் குறித்த கிராமமக்கள் குடிநீர்கிணறு ஒன்றை தோண்டும் பணிகளை ஆரம்பித்த போது பாரியளவிலான எலும்பு கூடுகளை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர் சுமார் ஐந்துஅடி ஆழத்தில் 16பேரினது எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கிராமமக்கள் குறித்த சம்பவத்தை கிராமசேவகருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் கிராமசேவகர் அரச அதிபருக்கு அறிவித்ததாகவும் மாவட்ட நீதவான் இராமகலனுக்கு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது இதன்பின்னர் மாவட்ட சட்டவைத்திய அதிகாரி ரகுமான் முன்னிலையில் குறித்த மனிதபுதைகுழி தோண்டப் பட்டுள்ளது இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இந்த மனித புதைகுழி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது சுமார் 3வருடங்களுக்கு முன்னர் இந்த உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் புதைகுழியில் இதுவரை 4தோட்டாக்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. குறித்த மனித புதைகுழியில் மேலும் எழும்புக்கூடுகள் காணப்படலாம் என அச்சமும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதிரியார்கள் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகள்: போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்
Next post பெல்ஜியம் பிரதமர் ராஜினாமா