மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 39 Second

அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும் புளியன் இலைகளின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.நமது உணவில் முக்கிய இடம் பெறுவது புளி. இந்த புளிய மரத்தின் இலை, பூ, காய், வேர், பட்டை என அனைத்து பாகங்களுமே பயன் தருகிறது. புளிய மர இலையில் புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் உள்ளன. மேலும் பல்வேறு சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக கெரட்டீன், லைக்கோபெனின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளது.

உடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளித்தள்ளி புற்றுவராத வண்ணம் பாதுகாக்கிறது. புளியன் இலைகளை சுவைத்து உண்பதாலோ, தேநீராக்கி குடிப்பதாலோ ஈறுகளில் ரத்த கசிவினை தடுத்து, வாய்துர்நாற்றத்தை நீக்குகிறது. உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பினை கரைக்கிறது.
உடம்புக்கு வெளிப்பூச்சு மருந்தாகும் புளியன் இலை: தேவையான பொருட்கள்: புளியன் இலை, தண்ணீர். செய்முறை: பாத்திரத்தில் புளியன் இலை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இலைகள் பழுப்பு நிறம் வந்ததும், நீரை வடிக்கட்டி கொள்ளவும். இந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள நுண்கிருமிகள் அழிகின்றன. சிறுநீர் தாரையில் ஏற்படுகின்ற தொற்று, எரிச்சல், உள்உறுப்பு புண்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகி, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.

புளியன் இலையை கொண்டு பெண்களின் உடல் நலத்துக்கான துவையல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கடுகு, உளுந்தம் பருப்பு, நெய், பூண்டு, புளியன் இலை, வரமிளகாய், உப்பு.செய்முறை: வானலியில் நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் சுத்தம் செய்த இளந்தளிர் புளியன் இலைகளை சேர்த்து வதக்கவும். இந்த கலவையுடன் உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இதனை கருத்தரித்த பெண்கள் எடுத்துக் கொள்ளும்போது, கருவளர்ச்சிக்கு உற்ற துணையாக இருக்கிறது.

பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பியாக இருக்கிறது. இதய நோய், மஞ்சள் காமாலை, அல்சர் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. மாதவிலக்கு
நேரங்களில் ஏற்படுகின்ற வலியை நீக்குகிறது. குதிகால் மற்றும் மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், புளியன் இலை.செய்முறை: பாத்திரத்தில் விளக்கெண்ணெய் காய்ந்ததும், புளியன் இலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், இளஞ்சூட்டில் மூட்டு, குதிகால்களில் பற்றாக போடலாம். இது வலி நிவாரணியாக செயல்படுவதோடு, நல்ல ரத்த ஓட்டத்தை உருவாக்கி தோலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. புளியன் இலைகளை மசித்த பருப்புடன் குழம்பு வைத்து சாப்பிடுவதால், சுவையான உணவாக அமைவதோடு, அனைத்து ஊட்டச்சத்துகளும் உடலுக்கு சேரும். இதனை அடிக்கடி பெண்கள், குழந்தைகள் எடுத்து வருவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் மகனை தூக்கத்திலிருந்து எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்!!(உலக செய்தி)
Next post பெற்ற தாயை அடித்து கொன்ற மகன்!!(உலக செய்தி)