துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!! (உலக செய்தி)

Read Time:1 Minute, 45 Second

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட கச்சிடூரா மற்றும் டிரகாட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதேபோல், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பேத் டியல்காம் பகுதியிலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த மூன்று பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில் இராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்ததாகவும், பொதுமக்களில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 40 பேர் காயமடைந்ததாகவும் ஜம்முவில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் இன்று பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவுளச்சீட்டு!!(கட்டுரை)
Next post குறைந்த வயதில் மரணம் அடைந்த நடிகர்கள்-!!(வீடியோ)