ரஜினி, கமல் இடையே சமமான போட்டி!! (சினிமா செய்தி)

Read Time:3 Minute, 32 Second

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் ரஜினிகாந்த். உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன்.

தமிழ் ரசிகர்களிடம் மட்டுமல்ல, இந்திய அளவிலும் பிரபலமான இருவரும் இன்றுவரை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி, கமல் படம் என்றாலே ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பு இருக்கிறது. 2 பேருமே மிகப்பெரிய நட்சத்திரங்கள்.

‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ திரைக்கு வர தயாராகி வருகிறது. ‘காலா’ படம் அடுத்த மாதம் ‘ரிலீஸ்’ ஆகிறது. இதுதவிர புதுப்படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். கமல் நடித்துள்ள ‘விஸ்வரூபம் 2’ திரைக்கு வரஇருக்கிறது. ‘சபாஷ் நாயுடு’ படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இப்போது ‌ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

பிரபல நடிகர்கள் என்ற முறையில் ரஜினி, கமல் இருவருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் அபிமான நடிகர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கமல் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரஜினியும் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார். ரஜினிமன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு இருக்கிறது. உறுப்பினர் சேர்க்கையும் நிர்வாகிகள் நியமனமும் நடந்து வருகிறது.

கமல்ஹாசன் ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கமலின் ரசிகர்களும் அரசியல் அபிமானிகளும் அவருடைய டுவிட்டர் பக்கத்தை தொடர்கிறார்கள்.

இதுபோல் ரஜினியும் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் அரசியல் அபிமானிகளும் இந்த டுவிட்டர் பக்கத்தை தொடர்ந்து வருகிறார்கள். ரஜினி, கமல் டுவிட்டர் பக்கங்களை தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரஜினி டுவிட்டர் பக்கத்தை 46 லட்சம் பேரும், கமல் டுவிட்டர் பக்கத்தை 46 லட்சம் பேரும் தொடர்கிறார்கள்.

அரசியலில் களம் இறங்கும் ரஜினி, கமல் இருவரையும் தொடர்பவர்கள் தலா 46 லட்சம் பேர் என்பது பார்வையாளர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அரசியலில் இவர்களுக்கு மக்கள் ஆதரவும் இதுபோல் சரி சமமாக இருக்குமா? என்ற கேள்வியை அரசியல் பார்வையாளர்களிடம் எழுப்பி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post சீமான் மொத்த சொத்து மதிப்பு !!( வீடியோ)