அல்-காய்தா தலைவர் பின்லேடன் பிடிபட்டால் தூக்கிலிட வேண்டும்: ஒபாமா

Read Time:1 Minute, 29 Second

அல்-காய்தா தலைவர் பின்லேடன் உயிருடன் பிடிபட்டால், அவரை தூக்கிலிட வேண்டும் என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பராக் ஒபாமா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். “அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பின்லேடன். எனவே, அவருக்கு தலையாய தண்டனை வழங்கப்பட வேண்டும். பொதுவாக, மரண தண்டனையை நான் ஆமோதிப்பதில்லை. இருப்பினும், கொடிய குற்றங்களுக்கு இத்தண்டனை அளிக்கப்பட வேண்டியது அவசியம் என கருதுகிறேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். பேட்டியின் போது, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயை கடுமையாக சாடிய ஒபாமா, நாட்டை சரியாக வழிநடத்தவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் அரசு இயந்திரம், நீதித்துறை, காவல்துறை ஆகியவற்றின் செயல்பாட்டின் மீது மக்கள் நம்பிக்கையை பெற கர்சாய் தவறிவிட்டதாக அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரிட்டனில் இளம் வயதில் டாக்டரான இந்தியப் பெண்
Next post புலிகளுடன் போர்-எதிர்க்கும் சிங்களர்கள்!