வளர்ற பிள்ளைங்க நல்லா சாப்பிட வேணாமா…!!(மருத்துவம்)

Read Time:3 Minute, 53 Second

கவுன்சிலிங்

‘வளர்ற பிள்ளை… நல்லா சாப்பிட வேணாமா…’ என்பது வளர் இளம்பருவத்தினரைக் கொண்ட குழந்தைகள் வீட்டில் அடிக்கடி கேள்விப்படுகிற வாசகம். அப்படி என்னென்ன ஆரோக்கியமான உணவுவகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்?

* காலையில் எலுமிச்சைச் சாறு அல்லது நெல்லிச்சாறு அருந்துவதோடு ஏதாவது ஒரு கொட்டை வகையில் 5 முதல் 10 எண்ணிக்கைகள் சாப்பிட வேண்டும்.

* கம்பு, அரிசி போன்ற முழு தானிய உணவை பிரதான உணவாக சாப்பிட வேண்டும்.

* தினசரி 2 கப் மாட்டுப்பால் அல்லது ஒரு கப் தயிர் சாப்பிட வேண்டும்.

* பச்சைக் கீரைகள் அல்லது புதினா, கொத்தமல்லி சட்னிகள் அல்லது துளசி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சாறுகள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி சாப்பிட வேண்டும்.

* இயற்கை முறையில் விளைந்த, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை நாளொன்றுக்கு 250 கிராம் அளவில் சாப்பிட வேண்டும்.

* உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகளைப் பெறுவதற்கு ஆளி விதை அல்லது எள் விதை பொடிகளை சாப்பிடலாம்.

* அந்தந்த பருவகால பழங்களை (Seasonal Fruits) காலையில் 11 மணி அளவிலும், மாலையில் 4 முதல் 5 மணி அளவிலும் சிற்றுண்டியாக
சாப்பிடலாம்.

* நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பாரம்பரிய எண்ணெய் வகைகளை சமையலில் தேவையான அளவிலோ அல்லது சுத்தமான நெய், வெண்ணெய் போன்றவற்றை 2 முதல் 3 தேக்கரண்டி அளவிலோ தினசரி சாப்பிட வேண்டும்.

* துவரம்பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகள், முளைகட்டிய பயறுவகைகள், பன்னீர் மற்றும் கறிவகைகளை 1/2 கப் முதல் 1 கப் வரை தினசரி சாப்பிட வேண்டும்.

* மீன் அல்லது இறைச்சி வகைகளை நாளொன்றுக்கு 100 முதல் 150 கிராம் அளவில் வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட வேண்டும்.

* நாளொன்றுக்கு ஒரு முட்டை சாப்பிடலாம். அதோடு வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்துள்ள எலுமிச்சைச்சாறு அல்லது நெல்லிச்சாறு,
தக்காளிச்சாறு அருந்தலாம்.

* சீரகம் கலந்த தண்ணீர், ஓமம் கலந்த நீர், துளசி நீர் அல்லது புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, தக்காளி போன்றவற்றின் சாறுகளை தேவைக்கேற்ப அவ்வப்போது அருந்த வேண்டும்.

* கோடை காலத்தில் தண்ணீர், மோர், இளநீர், பழச்சாறுகள் அருந்த வேண்டும். அதேபோல குளிர்ந்த காலத்திற்கு ஏற்ற சூடான சூப் வகைகள், ரசம் போன்றவற்றை அருந்த வேண்டும்.

* சுத்தமான குடிதண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது. அது உடற்பயிற்சி வகுப்புகளுக்குப் பிறகு உடல் தசைகளில் ஏற்படும் தாக்கங்களிலிருந்து பழைய நிலைக்கு மீண்டு வருவதற்கும், உடலை சுத்தப்படுத்துவதற்கும் மிகுந்த உறுதுணையாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…!!(மகளிர் பக்கம்)
Next post பத்தே கேள்விகள் – சீமானின் பளிச் பதில்கள்!!(வீடியோ)