மண வாழ்க்கை மனம் கவர்ந்ததாக மாற, உறவுக்கு வழிவகுக்க!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 12 Second

திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டுகொள்வதில்லை என்பது பெரும்பாலான பெண்களின் புகார். இதன் காரணமாகவே சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் பூதாகரமாக பார்க்கப்பட்டு பிரச்சினைகளாக உருவெடுகின்றன. பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அலசும் கட்டுரை இது.

மனம் கவர்ந்தவரிடம் எதிர்பார்ப்பது
வெறும் உடல் ரீதியான உறவு மட்டுமே கணவரிடம் இருந்து பெண்கள் எதிர்பார்ப்பதில்லை. அதையும் தாண்டி மனதளவில் ஆறுதலாக இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர். பெண்களின் தேடுதல் மிகவும் பெரியது. அதை நிறைவேற்றும் ஆண்களை அவர்கள் பூஜிக்கின்றனர்.

பேசி புரிய வைக்கலாம்
பேச்சு என்பது இரு மனங்களுக்கிடையேயான இறுக்கத்தை தளர்த்தும் ஆயுதம். மனதில் பாரம் என்றால் இருவரும் பேசுங்கள். அதிகமாக பேசுவது ஆறுதலைத் தரும். இருவருக்கிடையேயான நேசத்தை பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும்.

புறத்தோற்றத்தை ஒதுக்கித் தள்ளுங்கள்
மணமான புதிதில் ஒல்லியாக இருக்கும் பெண்கள் குழந்தை பெற்றவுடன் அவர்களின் உடல் குண்டாவது இயல்பு. இது அநேக ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாக இருக்கிறது. மனைவியின் புறத்தோற்றத்தை விமர்சனம் செய்யும் கணவர்கள் இன்றும் இருக்கின்றனர். இதனால் மனரீதியான பிரச்சினைக்கு பெண்கள் ஆளாகின்றனர். அழகு என்பது உருவத்தில் இல்லை. மனதில்தான் இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும். பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஆண்களே நல்ல துணைவர்களாக இருக்க முடியும்.

சின்ன சின்ன ரொமன்ஸ்
தாம்பத்ய உறவு மட்டுமே மணவாழ்க்கைக்கு முக்கியமில்லை. சின்ன சின்ன ரொமன்ஸ்களையும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர். பெண்கள் எதிர்பாராத நேரத்தில் அவ்வப்போது கொடுக்கும் முத்தம். சமையலறையில் சத்தமின்றி செய்யும் சில்மிசங்கள். மனைவியின் கைகளை பிடித்து உனக்கு நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் விதமாக காதோரம் கிசு கிசுப்பாக கூறும் ஐ லவ் யூ என்ற வார்த்தை என பெண்கள் எதிர்பார்ப்பது எத்தனையோ உண்டு. ஆனால் இவற்றை நிறைய ஆண்கள் செய்யத் தவறிவிடுகின்றனர்.

இனிய உறவின் உன்னதம்
ஆண்கள் அவசரக்காரர்கள். தங்களின் காரியம் முடிந்தவுடன் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கப் போய்விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு எதையுமே ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். கணவருடனான நெருக்கத்தை அசை போடுவதில் பெண்களுக்கு அலாதி பிரியம் உண்டு. எனவே உறவின் போது மட்டுமல்லாது உறவிற்கு முன்பும், பின்பும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

இவற்றை கடைபிடிக்கும் ஆண்களை பெண்கள் ஆராதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலுக்கு முற்று புள்ளி வைத்த ரஜினிகாந்த்!!(வீடியோ)
Next post கிண்டல் கேலிகளுக்கு ரஜினி பதில்… !!(வீடியோ)