செக்ஸில் பிரச்சினையா ? (அவ்வப்போது கிளாமர்)

Read Time:6 Minute, 21 Second

செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சினையாக மாறினால்… நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா… ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக்கிறது. நிறையப் பேருக்கு குறி்ப்பாக பெண்களுக்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும் உடலையும் வாட்டி வதைத்து வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.

அதிலும், அதீதமான செக்ஸ் உணர்வுகள் பொங்கிப் பிரவகிக்கும் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகளை சொல்லில் அடக்க முடியாது. எப்படி தணிப்பது, தவிப்பை எப்படித் தவிர்ப்பது, எதை ஊற்றி காமத்தீயை தணிப்பது என்பதில் அவர்கள் பெரிதும் தடுமாறிப் போய் விடுகிறார்கள், பல நேரங்களில் தடம் மாறியும் போய் விடுகிறார்கள். ஆனால் பல பெண்களுக்கு செக்ஸ் மீது பெரும் விரக்தி ஏற்பட்டு விடுகிறது.

நாட்டம் குறைந்து போய் விடுகிறது. விருப்பம் இல்லாமல் கடனுக்கு கணவரிடம் படுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையைத் தவிர்த்து, அதை சரி செய்து எப்படி தொடர்ந்து உறவில் ஈடுபடுவது என்பது குறித்த பார்வை இது…

விருப்பமின்மை

எந்தப் பெண்ணுக்குமே செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் போகவே போகாது. நிச்சயம் இருக்கத்தான் செய்யும், ஆனால் ஆண்களைப் போல வெளியில் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நாம்தான் அடையாளம் கண்டு அனுசரணையுடன் அணுக வேண்டும்.இரவு விளையாட்டுக்கு பகலிலிருந்தே இவர்களைத் தயார்படுத்த வேண்டும். சின்னச் சின்ன செக்ஸ் விளையாட்டுக்கள், முத்தம், முன் விளையாட்டுக்கள் என பகலிலிலிருந்தே ரொமான்ஸைத் தொடங்கினால் இரவில் இவர்கள் சிறப்பான முறையில் தயராகி விடுவார்களாம்.

அழகா இல்லையே

சில பெண்களுக்கு தாங்கள் அழகாக இல்லை, உடல் அழகு சரியில்லை என்ற விரக்தி இருக்கலாம். இவர்களுக்கும் கூட செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்குமாம். ஆனால் இப்படிப்பட்ட பெண்கள் மீது அவர்களின் ஆண் துணைகள் அதீத ஆர்வத்தையும், அன்பையும் பொழிந்தால் நிச்சயம் இவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் சிறப்பாக தூண்டப்படுமாம். உன்னாலும் என்னை ஆள முடியும், நீயும் செக்ஸியாகத்தான் இருக்கிறாய் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்தினாலே போதும் அவர்கள் நிச்சயம் செக்ஸில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார்கள் டாக்டர்கள்.

ஆர்கஸத்தில் ஆர்வமின்மை

ஆண்களுக்குத்தான் இந்த எழுச்சி, உச்சம், கிளைமேக்ஸ் எல்லாம் கவலை தரும் விஷயம். பெண்களைப் பொறுத்தவரை வெறும் முன் விளையாட்டுடன் நிறுத்தினால் கூட திருப்திப்பட்டுக் கொள்வார்கள். பெரும்பாலான பெண்கள் படுக்கையில் பொய்யான ஆர்கஸத்தைத்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறுகிறது ஒரு ஆய்வு. இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் மிகவும் பொறுமையாக, நேர்த்தியாக பெண்களைக் கையாண்டால் நிச்சயம் அவர்கள் உரிய நேரத்தில் ஆர்கஸத்தை எட்டுவது நிச்சயம்.

நான் என்ன செக்ஸ் மெஷினா

சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் செக்ஸ் நினைப்பிலேயே இருப்பார்கள். தங்களது துணையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். இது பெண்களுக்கு அலுத்துப் போய் விடும். நான் என்ன செக்ஸ் மெஷினா என்று விரக்திக்குப் போய் செக்ஸையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் மனித நேயத்துடன் பொறுப்புடன், பொறுமையாக நடந்து கொண்டு மனதைக் காயப்படுத்தாமல் மனதையும், காமத்தையும் வெல்ல முயற்சிக்க வேண்டும்.

ரொம்ப வலிக்குதே

இது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான். உறுப்பு வறட்சி, இறுக்கம் காரணமாக உறவின்போது வலி ஏற்படுவது சகஜம்தான். இதனாலும் பலருக்கு செக்ஸ் பிடிக்காமல் போய் விடுகிறதாம். இதுபோன்ற நேரங்களில் உரிய உபாயங்களைக் கையாள வேண்டும். மேலும் முரட்டுத்தனமான உறவை தவிர்க்க வேண்டும். பூவைப் போல பெண்களின் உறுப்பை பாவித்து அதை அணுகி இன்பத்திற்குள் நுழைய வேண்டும்.

இப்படி பெண்கள் சந்திக்கும் செக்ஸ் பிரச்சினைகள் நிறையவே உள்ளன. ஆனால் பிரச்சினை என்று வந்தால் கூடவே தீர்வும் இருக்கத்தானே செய்யும். அதை நாம் சரியாக உணர்ந்து, புரிந்து தெளிந்து அணுகினால் எல்லாம் சரியாகி, இன்பமும் கைகூடி வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2.0 படத்தில் ஐஸ்வர்யாராய் சஸ்பென்ஸ்!!(சினிமா செய்தி)
Next post அமெரிக்காவில் மகனை தூக்கத்திலிருந்து எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்!!(உலக செய்தி)