செயல்திறன் குறைகிறது இந்தியர்களின் நுரையீரல்!!

Read Time:2 Minute, 41 Second

‘வட அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களைவிட இந்தியர்களின் நுரையீரல் செயல்திறன் 30 சதவிகிதம் குறைவாக இருக்கிறது’ என்று CSIR மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் இயக்கத்தின் இயக்குநரும், மருத்துவருமான அனுராக் அகர்வால் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் வல்லபாய் படேல் இதய மையம் நுரையீரல் சம்பந்தமாக மேற்கொண்ட ஆய்வில், டெல்லியில் உள்ள குழந்தைகளின் நுரையீரல் திறன் அமெரிக்க குழந்தைகளின் நுரையீரல் திறனை விட 10 சதவிகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், மூன்றில் ஒரு குழந்தை பலவீனமான இதயத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களின் நுரையீரல் செயல்திறன் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்களைவிட 30 சதவிகிதம் குறைவாக உள்ளது. இந்த சதவிகிதம் சீனர்களோடு ஒப்பிடுகையில் சிறிதளவு குறைந்துள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு காற்று மாசுபாடு, உடல் இயக்கம், ஊட்டச்சத்து மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்கள் உள்ளன. இந்த பிரச்னையில் காற்று மாசு முக்கிய பங்கு வகிப்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதுபோன்ற பிரச்னைகளால் இந்தியர்களுக்கு நீரிழிவு, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. எனவே, மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்று தங்களுடைய ஆய்வின் மூலம் தெரிவித்திருக்கிறார் அனுராக் அகர்வால். காற்று மாசினைக் கட்டுப்படுத்த அனைவரும் கரம்கோர்த்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற எச்சரிக்கையையே இந்த அறிக்கை நமக்கு உணர்த்திஇருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொத்துக்காக பெற்ற மகனே தாயை கொலை (வீடியோ)!!
Next post குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு (வீடியோ) !!