விவசாயி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!!

Read Time:1 Minute, 42 Second

ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகல்ல மெதகம பிரதேசத்திலுள்ள விவசாய நிலமொன்றில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி ஒருவரின் சடலம இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 71 வயதுடைய கே.பீ.டிம். டிக்கிரி பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தாம் விவசாயம் செய்யும் விவசாய நிலத்தில் உள்ள குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ஊவா பரணகம – வெவேகம பகுதியை சேர்ந்த குறித்த விவசாயி கொலை குற்றவாளியாக 08 வருட காலம் சிறையில் இருந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மரண விசாரணையும், பிரேத பரிசோதனையும் முடிந்தபின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்(அவ்வப்போது கிளாமர்)!!
Next post கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி!!