விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகக்கூடாது : பிரியா வாரியருக்கு இயக்குனர் திடீர் தடை ( சினிமா செய்தி )!!

Read Time:2 Minute, 32 Second

ஒரு அடார் லவ் படத்தின் டீஸரில் கண்ணடித்தும் நமட்டு சிரிப்பு சிரித்தும் ரசிகர்களை கவர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் ஒரே நாளில் உலக புகழ் பெற்றார். பிரபலமாகிவிட்டாலே அவர்களுக்கு வசதியும், பணமும் தன்னால் தேடி வருகிறது. அடுத்தடுத்த படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் நிலையில் அதையும் மீறி அவருக்கு பணமழை கொட்டுகிறது. இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பிரியா வாரியர் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார். புகழ்பெற்ற கலைஞர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விளம்பர நிறுவனங்கள் வளைத்துப் போட்டுவிடுகின்றன. பிரபலங்கள் தங்களது இணைய தள பக்கத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கின்றனர். பிரியாவாரியரை பொறுத்தவரை இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு பதிவு செய்தால் அதற்காக ரூ.8 லட்சம் வருமானம் பெறுகிறார்.

சர்வதேச நிறுவனங்கள் தங்களது கம்பெனியின் பொருட்களை இதுபோன்ற பிரபலங்கள் மூலம் விளம்பரப்படுத்துகின்றன. ஏற்கனவே அமிதாப், விராத் கோஹ்லி, அலியாபட், சோனாக்‌ஷி சின்ஹா போன்றவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் பார்த்துக்கொண்டிருக் கின்றனர். இதற்கிடையில் ஒரு அடார் லவ் பட இயக்குனர் ஒமர் லுலு, பிரியாவாரியருக்கு புதிய விளம்பரங்களில் நடிக்க தடை விதித்திருக்கிறார். இதையடுத்து ஏராளமான நிறுவனங்கள் அணுகியபோதும் அதனை ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் பிரியா. ‘ஒருமுறை ஒப்பந்தம் செய்துவிட்டால் பிறகு அந்த நடிகையின் கட்டுப்பாடு முழுவதும் குறிப்பிட்ட நிறுவனத்தின் கைகளுக்கு மாறிவிடும். அவர்கள் சொல்லும்போதுதான் இவரால் தனது போஸ்ட்டை பதிவு செய்ய முடியும்’ என்றார் இயக்குனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏன் வேண்டும் உச்சகட்டம்(அவ்வப்போது கிளாமர்) ?
Next post பதிவு செய்யப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தாய்லாந்து பிரதமர் கடும் எச்சரிக்கை( உலக செய்தி)!!