அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படும் காலம் மலரும் சாத்தியமுள்ளது -ரி.எம்.வி.பி தலைவர் கருணா

Read Time:1 Minute, 54 Second

கிழக்கு மாகாணத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் செயற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். ரிஎம்விபியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக சூரியன் வானொலிக்கு வழங்கிய விசேட செவியில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் பாதையில் செயற்பட எண்ணியுள்ள தமது கட்சி எதிர்காலத்தில் தமிழ் மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் செயற்படும் எனக் கூறியுள்ள அவர் பெர்துத் தேர்தல் ஒன்று வரும் பட்சத்தில் அனைத்து மக்களும் எமது கட்சிக்கு ஆதரவளித்து அதிகூடிய ஆசனங்களை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணம் நிரந்தர தீர்வொன்றின் மூலம் இணைக்கப்பட்டால் அதற்கு ஆதரவழிப்போம் என்றும் தமிழ் மக்களோடும், அனைத்து அரசியல் கட்சிகளோடும் இணைந்து செயலாற்றுவதே தமது எண்ணம் எனவும் கருணா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டு பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படும் காலம் மலரும் சாத்தியமுள்ளது -ரி.எம்.வி.பி தலைவர் கருணா

  1. I really appreciate the head of the party KARUNA and cheif minister sivanesathurai.The number of people those love you will increase to the heighest level regardless religion and language. You paved a correct path for the people after very long suffering. Please do me a favour for the tamil`s good. No tamil politicion has done so far.”Late is better than never”.PLEASE THANK THE SINGALESE WHO PROTECTED THE TAMILS IN 1983 RIOT. It will initiate a good culture with peace and harmony. I am jaffna tamil, pro-indian since the first demonstration against the government started in 1971. Believe india and respect singalese. I wish your party expansion to the north as well .God bless you all. Thank you.

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post இங்கிலாந்தை அழிக்க வேண்டும்; பின்லேடனின் 16 வயது மகன் அழைப்பு