நண்பர்களுடன் சென்ற பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடுமை!!

Read Time:2 Minute, 9 Second

ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை 5 நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளத்திலும் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பாரன் மாவட்ட மகளிர் காவல்நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோடாவில் உள்ள சாலையோர உணவகத்தில் கூலி வேலை செய்யும் அப்பெண், சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்ததாகவும், இந்நிலையில், தனது குடும்பத்திற்கு நன்கு பழக்கமானவரான சேட்டன் மீனா என்ற 21 வயது இளைஞர் தன்னை இருசக்கர வாகனத்தில் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று தனது 5 நண்பர்களுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும், அதை வீடியோ படம் எடுத்து மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை கொன்றுவிடுவதாக 6 பேர் கும்பல் மிரட்டியதாலேயே புகார் அளிக்காமல் இருந்ததாகவும், ஆனால், சமூகவலைதளத்தில் வீடியோவை பகிர்ந்ததால் சுற்றுவட்டார பகுதிகளுக்கெல்லாம் இதுபரவி விட்டதாகவும், மிகுந்த மன உளைச்சலில் புகார் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20 பேரை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பள்ளி மாணவி- (வீடியோ)
Next post ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்.( சினிமா செய்தி)!!