மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம்: பிரான்ஸ் அறிவுரை!!
மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம் என்பது உட்பட பல மருத்துவ அறிவுரைகளைக் கொண்ட “Health Book” ஒன்றை பிரான்ஸ் அரசாங்கம் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.
பிரான்சில் 2006 ஆம் ஆண்டு முதல் ஒரு குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் அல்லது அந்தக் குழந்தை பிறந்த வார்டில் உள்ள ஊழியர்கள் குழந்தையின் பெற்றோருக்கு ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஒரு மருத்துவக் கையேட்டை வழங்குவது வழக்கம்.
தற்போது ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு அந்த புத்தகத்தில் பல புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டு புதிய மருத்துவக் கையேடு ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.
அந்தக் கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள்:
மூன்று வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் தொலைக்காட்சி, மொபைல் மற்றும் ஐ பேடுகளை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை வளரும் குழந்தையின் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
முன்பு diphtheria, tetanus மற்றும் polio ஆகிய நோய்களுக்கு மட்டும் கட்டாய தடுப்பூசி போடப்பட்டது. ஜனவரி 1க்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு இனி measles, hepatitis B, meningitis C, rubella, mumps மற்றும் whooping cough உட்பட 11 தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்படும்.
ஆறு மாதக் குழந்தைகள் வரை இனி பெற்றோரின் படுக்கையறையிலேயே உறங்கச் செய்யுமாறு பரிந்துரைக்கப்படும். இதனால் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்கள் தவிர்க்கப்படலாம்.
பால் புகட்டுவதற்கு இனி பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் கண்ணாடி பாட்டில்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.
கடைசி அறிவுரை, குழந்தையைப் போட்டுக் குலுக்கக்கூடாது. இதனால் அவை வாழ்நாள் முழுவதும் குறைபாடுடையக் குழந்தைகளாக மாறும் அபாயத்திலிருந்து தப்பலாம்.
“நீங்கள் ஒரு வேளை எரிச்சலுற்றிருந்தால், குழந்தையை அழகாக படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்று உங்கள் அன்பிற்குரிய யாராவது ஒருவரையோ அல்லது ஒரு மருத்துவ உதவியாளரையோ அழையுங்கள்” என்று அந்த புத்தகம் கூறுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating