சம்பள உயர்வுப் போராட்டம் தோல்வியடைந்தால் இராஜினாமா செய்வேன் -லால்காந்த சூழுரை

Read Time:2 Minute, 13 Second

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இன்று இடம்பெறும் போராட்டம் தோல்வியில் முடிவடைந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க தலைவருமான கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவம் காரணமாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு நாடு பாதாளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது இதனாலேயே தொழிலாளர்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட தீர்மானித்தனர் இந்தபோராட்டத்தை தடைசெய்ய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தொழிற்சங்கங்களின் பலர் கைது செய்யப் பட்டுள்ளதோடு பெரும்பாலானவர்களுக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது உரிமைக்கான இப்போராட்டத்தை நிறுத்த அரசாங்கத்தால் முடியாது அமைச்சர் டலஸ் அலகப்பெருமவுக்கு சவால் விடுக்கிறேன் இன்று பஸ் ரயில் எதுவுமே ஓடக்கூடாது முடிந்தால் இவ்விரண்டையும் செயற்பட செய்யுங்கள் பஸ் ரயில் போன்றவை சேவையில் ஈடுபட்டால் எனது பதவிகளை நான் இராஜினாமா செய்து கொள்வேன் அத்தோடு இன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அரசாங்கத்திடமிருந்து தகுந்த பதில் கிடைக்கவில்லை என்றால் நாளை முதல் அடுத்த போராட்டத்திற்கு ஆயத்தமாவோம் என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எமது கட்சி உறுப்பினர்களை அரச பாதுகாப்புத்துறையில் இணைத்துக் கொள்ள முயற்சிப்பேன்! -கருணாஅம்மான் பேட்டி
Next post சிறீ. மு. காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று சத்தியப் பிரமாணம்