ஆஸ்பத்திரியில் மலர்ந்த காதல்: முஸ்லிம் வாலிபரை மணந்த ராஜபுத்திர பெண்; பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு

Read Time:3 Minute, 54 Second

முஸ்லிம் வாலிபரை காதலித்து மணந்த ராஜபுத்திர பெண், பெற்றோர்களால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் பிங்கி குமாரி (வயது 22). இவரது தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது பிங்கி குமாரி, தாயார் அருகில் இருந்து கவனித்து வந்தார். ஆஸ்பத்திரி அருகே டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்த சையது அகமதுடன் (24) பிங்கி குமாரிக்கு காதல் ஏற்பட்டது. பிங்கி குமாரி பி.ஏ. பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தந்தை `டாடா’ மோட்டார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். வசதி படைத்த பிங்கி குமாரி, வசதி குறைந்த சையது அகமதுவிடம் மனதை பறிகொடுத்தார். ஆஸ்பத்திரியில் முளைத்த காதல் பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. தாயாருக்கு சிகிச்சை முடிந்து பிங்கி குமாரி சொந்த ஊர் போய்விட்டார். அதன்பிறகும் கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்தனர். காதல் விவகாரம் வெளியே தெரிய வந்ததால் பிங்கி குமாரியின் தந்தை கடுமையாக கண்டித்தார். பிங்கி குமாரி ராஜபுத்திர இனத்தை சேர்ந்த இந்து பெண் ஆவார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த சையது அகமதுவுக்கு, பிங்கி குமாரியை திருமணம் செய்து கொடுக்க அவரது தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், பிங்கி குமாரியோ `மணந்தால் சையது அகமதுவையே மணப்பேன்’ என்று உறுதியாக இருந்தார்.

இந்த நிலையில், பெற்றோரையும், பிறந்த ஊரையும், சாதி-சமயம் மற்றும் உறவினர்களையும் தூக்கி எறிந்துவிட்டு, பிங்கி குமாரி ரெயில் ஏறி வேலூர் வந்துவிட்டார். தனது காதலனை சந்தித்து திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். சையது அகமதுவும், பிங்கி குமாரியை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்டார். சையது அகமதுவின் பெற்றோரும் இந்த திருமணத்தை ஏற்கவில்லை.

சென்னையில் தஞ்சம்

இதனால் சையது அகமது, காதல் மனைவி பிங்கி குமாரியோடு நேற்று முன்தினம் சென்னை வந்தார். தனது நண்பர் வீட்டில் தங்கினார். அவருக்கு செல்போனில் கொலை மிரட்டல்கள் வந்தது. இதனால் பயந்து போன சையது அகமது, மனைவி பிங்கி குமாரியோடு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உரிய பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார்.

10-ம் வகுப்பு வரை படித்துள்ள நான், சென்னையில் ஏதாவது ஒரு தொழில் செய்து பிங்கி குமாரியை கடைசி வரை காப்பாற்றுவேன் என்று சையது அகமது தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

3 thoughts on “ஆஸ்பத்திரியில் மலர்ந்த காதல்: முஸ்லிம் வாலிபரை மணந்த ராஜபுத்திர பெண்; பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு

  1. ரியாதிலிருந்து 'பரங்கிப்பேட்டை' காஜா நஜிமுதீன் says:

    There you’re MAN! Keep it up!! I appreciated your courageness and wish you, both, all the best!! God will help you, both. Be courage!!

  2. Just a few months of love led to disregard a two decades of love and care of the parents!!!!!.
    Any how the mattres now over. Praying to keep the marrage up to the life time.!

  3. I am ready to arrange jobs and VISA for him, if he agree to come to lanka. If u have any contact details, pls provide me. Siyam

Leave a Reply

Previous post ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் கலவரத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் இந்தியர்கள் கைது
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..