(மருத்துவம்)எடையைக் குறைக்கும் லவங்கப்பட்டை!!

Read Time:2 Minute, 25 Second

மகிழ்ச்சி

லவங்கப்பட்டையில் உள்ள Cinnamaldehyde என்கிற எண்ணெய்ப் பொருள், உடல் கொழுப்பை அதிகரிக்கும் செல்களுக்கு எதிராக செயல்பட்டு உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

லவங்கப்பட்டையின் சுவை மற்றும் நறுமணத்துக்கு அதிலுள்ள Cinnamaldehyde என்ற எண்ணெய்ப் பொருளே காரணமாக இருக்கிறது. இது நம் உடலிலுள்ள கொழுப்பு செல்களை சூடாக்கி, அதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இப்படி மனிதர்கள் அல்லது மிருகங்களின் உடலில் உண்டாகும் வெப்ப ஆற்றலுக்கு Thermogenesis என்று பெயர். இந்த எண்ணெய் பொருளானது தெர்மோஜெனிசிஸ் இயக்கத்தை நொதிகள் மற்றும் மரபணுக்களில் அதிகரிக்கச் செய்து உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது.

சின்னமால்டிஹைடு பரிசோதனையை சுண்டெலிகளில் மேற்கொண்டபோது உடல்பருமன் பிரச்னைக்கு எதிராக செயல்பட்டது தெரியவந்தது. இதே பரிசோதனையை மனிதர்களில் செய்தபோதும் அதே மாதிரியான ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளது. ‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது உணவில் பயன்படுத்திவரும் லவங்கப்பட்டையிலுள்ள Cinnamaldehyde என்ற எண்ணெய்ப் பொருள் உடல்பருமன் பிரச்னையைத் தடுக்க உதவுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான்.

உடல்பருமனைக் குறைக்க லவங்கப்பட்டையை உணவில் சரியான அளவு சேர்த்துக்கொள்ளலாம் என்று இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பரிந்துரைக்கலாம். அதே நேரத்தில் ஆய்வு இன்னும் முழுமையாக முடிந்த பிறகுதான் இன்னும் லவங்கப்பட்டையைப் பயன்படுத்தும் விதம் பற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியும்’’ என்கிறார் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான ஜீன் வூ.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (சினிமா செய்தி)சன்னிலியோன் பேனர்களை வயலில் வைத்த விவசாயி!!
Next post (சினிமா செய்தி)நடிகை மீது பொலிஸார் புகார்!!