லண்டன் தெருவில் டாப்ஸி அரட்டை கச்சேரி!!

Read Time:1 Minute, 54 Second

பிறந்த நாளில் கேக் வெட்டி பார்ட்டி வைத்து நட்சத்திரங்கள் கொண்டாட்டம்போடுவதுண்டு. தனது பிறந்த நாளை லண்டன் தெருவில் கொண்டாடியது பற்றி நடிகை டாப்ஸி கூறியது: தில் ஜூங்ளி இந்தி படத்துக்காக லண்டன் சென்றிருந்தேன். அங்குள்ள தெருவில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அன்றைய தினம் எனக்கு பிறந்தநாள்.

வேலை மும்முரத்தில் மறந்துவிட்டேன். ஆனால் படகுழுவினர் எனது பிறந்தநாளை ஞாபகம் வைத்திருந்து என்னிடம் தெரிவித்தனர். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசினோம். அந்த கொண்டாட்டம் ஒரு இடத்தில் மட்டும் நின்றுவிடாமல் லண்டனில் பல இடங்களில் நடத்த வேண்டும் என்று முடிவானது. அன்று இரவு அங்குள்ள பிக்காடில்லே சர்கிள் பகுதிக்கு சென்றோம்.

ரிக்‌ஷாவை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அதில் ஏறி அமர்ந்து கூச்சல் போட்டபடியும், சிரித்துக் கொண்டும் கிண்டலடித்தபடியும் அரட்டை அடித்தோம். இந்த பிறந்ததினத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. நாங்கள் அரட்டை கச்சேரி நடத்தியதை அப்பகுதியினர் வேடிக்கை பார்த்தனர். எதற்காக இப்படி செய்தோம் என்பதை அறிந்தவுடன் பலர் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இவ்வாறு டாப்ஸி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் அரை நிர்வாணமாக நடிக்கிறாரா பூஜாகாந்தி!!
Next post ஆண்கள் மோசம்… பெண்கள்தான் அதிலும் பெஸ்ட் !