90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா : 3 ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றது டன்கர்க் படம்!!
90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் தொடங்கியது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் என மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகின்றன.தி ஷேப் ஆட் வாட்டர் திரைப்படம் 13 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கிரிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது/
*திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசெளரி என்ற திரைப்படம் 7 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜிம்மி கெம்மல் 2வது முறையாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
*சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைடு எப்பிங் படத்திற்காக சாம் ராக்வெல்லுக்கு வழங்கப்பட்டது.
*ஆஸ்கர் விருது: சிறந்த சிகை அலங்காரம்- கஸி ஹிரோ சுஜி; படம்- டார்க்கஸ்ட் ஹவர் .
டேவிட் மலினவ்ஸ்கி, லூசி சிப்பிக் ஆகியோருக்கும் சிறந்த சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
*சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது- மார்க் பிரிட்ஜஸ்; படம்- ஃபாண்டம் த்ரட்
*சிறந்த முழுநீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை இக்காரஸ் திரைப்படம் வென்றது
*சிறந்த ஒலி கலவைக்கான ஆஸ்கர் விருதினை டன்கர்க் திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது
*சிறந்த ஒலித் தொகுப்புக்கான ஆஸ்கர் விருதினையும் டன்கர்க் திரைப்படம் தட்டிச் சென்றது.சிறந்த ஒலித் தொகுப்புக்கான ஆஸ்கர் விருது அலெக்ஸ் கிப்ஸன், சிச்சர்டு கிங்கிற்கு வழங்கப்பட்டது.
* கிறிஸ்டோபர் நோலனின் டன்கர்க் திரைப்படம் இதுவரை 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன இரண்டாம் உலகப்போர் பற்றிய இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படம் டன்கர்க் .
*சிறந்த கலை இயக்குநருக்கான ஆஸ்கர் விருது தி ஷேப் ஆப் வாட்டர் படத்திற்காக 3 பேருக்கு வழங்கப்பட்டது பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ ஆகியோருக்கு சிறந்த கலை இயக்குநர் விருது வழங்கப்பட்டது.
* சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை சிலி நாட்டின் ஏ ஃபென்டாஸ்டிக் உமன் வென்றது ஏஃபென்டாஸ்டிக் உமன் படத்தின் இயக்குநர் செபாஸ்டியன் லீலியோ ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார்
*சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை டோனியா படத்திற்காக ஆலிசன் ஜேன்னி வென்றார்..
* ஆஸ்கர் விருது சிறந்த அனிமேஷன் குறும்படம்- டியர் பேஸ்கட் பால் ; விருது பெற்றவர்கள்- க்ளன் கீனி, கோப் ப்ரையண்ட்
* ஆஸ்கர் விருது சிறந்த அனிமேஷன் திரைப்படம்- கோகோ; விருது பெற்றவர்கள்- லீ அன்கிரிச், டார்லா கே. ஆண்டர்சன்
* ஆஸ்கர் விருது சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ்க்கான திரைப்படம் – பிளேடு ரன்னர் 2049 ; விருது பெற்றவர்கள்- ஜான் நெல்சன், ஜெர்டு நெஃப்சர், பவுல் லாம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். கூவர்
*ஆஸ்கர் விருது சிறந்த படத்தொகுப்புக்கான திரைப்படம் – டன்கர்க் விருது பெற்றவர்கள்- படத்தொகுப்பாளர் லீ ஸ்மித்
* சிறந்த ஒலி கலவை, ஒலித் தொகுப்பு, படத்தொகுப்பு என 3 ஆஸ்கர் விருதுகளை டன்கர்க் படம் வென்றுள்ளது.
* ஆஸ்கர் விருது சிறந்த குறும்படம்- தி சைலன்ட் சைல்ட் ; விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்
* ஆஸ்கர் விருது சிறந்த குறு ஆவணப்படம் – ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405 ; விருது பெற்றவர்கள்- ஃப்ராங்க் ஸ்டீபல்
* ஆஸ்கர் விருது சிறந்த திரைக்கதையாசிரியர்- ஜோர்டன் பீலே ; படம்- கெட் அவுட்
* சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது : கோகோ படத்தில் வரும் ரிமெம்பர் மீ பாடல் பெற்றது
* தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றார் ஜேம்ஸ் ஐவரி: படம் – CALL ME BY YOUR NAME
* ஆஸ்கர் விருது சிறந்த இசை : தி ஷேப் ஆப் வாட்டர் ; இசையமைப்பாளர் : அலெக்சாண்டர்
*ஆஸ்கர் விருது சிறந்த ஒளிப்பதிவாளர் : ரோஜர் டிக்கின்ஸ் ; படம் : பிளேடு ரன்னர் 2049
14 முறை பரிந்துரைக்கப்பட்டு முதன்முறையாக ரோஜர் டிக்கின்ஸ் ஆஸ்கர் விருதை பெற்றார்
*ஆஸ்கர் விருது விழாவில் மறைந்த திரைப்பட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது
Average Rating