ஆபரேஷன் ப்ளூஸ்டாரில் இங்கிலாந்து தலையீடு ரகசிய ஆவணங்கள் வெளியிடுவது தொடர்பான வழக்கு இன்று விசாரணை!!

Read Time:3 Minute, 57 Second

பஞ்சாப் பொற்கோயிலில் கடந்த 1984ம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசின் தலையீடு இருந்தது தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இங்கிலாந்து தீர்ப்பாயம் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து அரசின் ரகசிய ஆவணங்கள் சில, கடந்த 2014ம் ஆண்டு பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டன. அதில் ஒரு ஆவணத்தில் பஞ்சாப் பொற்கோயிலில் கடந்த 1984ம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கைக்கு இங்கிலாந்து ராணுவத்தின் ஆலோசனை வழங்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் கையில் எடுத்தனர். இதனால் முன்னாள் பிரதமர் டேவிட் மேரூன், இந்த கண்டுபிடிப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டார்.

அதன்பின் அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையில் வெறும் ஆலோசனை மட்டும் வழங்கியதுதான் இங்கிலாந்தின் பங்கு’ என தெரிவித்தார்.

இங்கிலாந்து தலையீடு தொடர்பான ரகசிய ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்க வேண்டும் என சீக்கிய அமைப்பு சார்பில் இங்கிலாந்திடம் வேண்டுகோள் விடப்பட்டது. இதற்கு பதில் அளித்த இங்கிலாந்து தகவல் ஆணையர், இது தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டாம் என அமைச்சரவை அலுவலகம் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

சீக்கியர்களின் தியாகம் என்ற புத்தகம் எழுதிய பில் மில்லர் என்ற பத்திரிக்கையாளர் கூறுகையில், ‘‘இச்சம்பவம் தொடர்பான பல ஆவணங்கள் இன்னும் ரகசியமாக உள்ளன. இது முழுவதும் வெளியிடப்பட்டால்தான் இங்கிலாந்து அரசின் உண்மையான தலையீடு என்ன என்பது தெரியவரும்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் அப்போதுதான், கடந்த 1984ம் ஆண்டு அமிர்தசரஸூக்கு ராணுவ ஆலோசகரை அப்போதைய பிரதமர் மார்கரெட் தாட்சர் அனுப்பிய முடிவை புரிந்து கொள்ள முடியும். 30 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த ரகசிய ஆவணங்களை இங்கிலாந்து வெளியிடுவதால், இந்திய அரசின் உறவு எந்த விதத்திலும் பாதிக்காது. தேசிய ஆவண காப்பகங்களில் உள்ள தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள, இந்தியாவிலும் தகவல் அறியும் உரிமை சட்டம் உள்ளது’’ என கூறியுள்ளார். இந்த ரகசிய ஆவணங்களை வெளியிடக் கோரியும், இது தொடர்பாக விசாரணை நடத்த கோரியும் இங்கிலாந்து தீர்ப்பாயத்தில் சீக்கிய அமைப்பினர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த மனு மீதான மூன்று நாள் விசாரணை இன்று தொடங்குகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மங்களூரு துறைமுகத்துக்கு பிரமாண்ட சொகுசு கப்பல்களில் வந்த சுற்றுலா பயணிகள்!!
Next post 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா : 3 ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றது டன்கர்க் படம்​!!