நேபாள சிறையில் கம்பி எண்ணும் கடத்தல் மன்னன் சோப்ராஜின் காதலுக்கு போலீஸ் `திடீர்’ தடை

Read Time:2 Minute, 40 Second

நேபாள சிறையில் கம்பி எண்ணி வரும் கடத்தல் மன்னன் சோப்ராஜ், அவனது காதலியை சந்தித்து பேச போலீசார் தடை விதித்துள்ளனர். சர்வதேச கடத்தல் மன்னனாக விளங்கியவன் சார்லஸ் சோப்ராஜ். இவன் ஏராளமான பெண்களை தன் வலையில் வீழ்த்தி பின்னர் அவர்களை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பிறந்த இவனுக்கு `பிகினி கில்லர்’ என்ற பட்டப்பெயர் கூட உண்டு. ஒரு அமெரிக்கரையும், கனடா சுற்றுலா பயணியையும் கொலை செய்த வழக்கில், இவன் தற்போது நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள சிறையில் கம்பி எண்ணி வருகிறான். இதற்கிடையே சோப்ராஜ் மீது உள்ள வழக்கு மொழி பெயர்ப்புக்காக 20 வயதான நிகிதா என்ற இளம்பெண் வந்தார். அப்போது 64 வயதாகும் சோப்ராஜ×க்கு, நிகிதாவை பார்த்ததும் காதல் பற்றிக் கொண்டது. நாளடைவில் நிகிதாவுக்கும், சோப்ராஜை பிடித்து போனது. அதுமுதல் இருவரும் சிறையில் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். தண்டனை முடிந்து வெளியே வந்ததும் நிகிதாவை திருமணம் செய்து கொள்வேன் என்று சோப்ராஜ் கூறினார். ஆனால் இவர்களின் காதலுக்கு நேபாள போலீசார் திடீரென தடை விதித்து விட்டனர். முன்பெல்லாம் சோப்ராஜ×ம், நிகிதாவும் சிறையில் கைதிகள் அல்லது சிறை அதிகாரி முன்னிலையில் சுதந்திரமாக சந்தித்து பேசுவார்கள். ஆனால் இப்போது இருவரையும் சிறைக்குள் செல்லும்படி அதிகாரிகள் கெடுபிடி செய்வதுடன், இருவரும் தனிமையில் சந்தித்து பேச அனுமதிப்பதில்லை. இதுபற்றி ஒரு அதிகாரி கூறுகையில்; சோப்ராஜ் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால் சிறை விதிகளை அவர் கடைப்பிடித்தே ஆக வேண்டும். இருந்தாலும் சோப்ராஜ×க்கு உணவு கொண்டு செல்ல நிகிதாவுக்கு எந்த தடையும் இல்லை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணாக மாறும் தனது உடலுக்கு சிகிச்சையளிக்க பிரிட்டன் பாடகர் கோரிக்கை
Next post சினிமாத்துறையில் இணையுமுன் நட்சத்திரங்கள் ஆற்றிய தொழில்கள்