குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு – நோர்வே முதலிடம்!

Read Time:5 Minute, 20 Second

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8 ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது.

இதில் 93 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். ரஷ்யாவை சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டது நிருபிக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் ஒலிம்பிக் கமிட்டிக்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. இதையடுத்து அந்நாட்டின் வீரர்கள் தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கினர்.

எக்குவடோர், மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகள் முதன்முதலாக பங்குபெறுகின்றன. இந்த போட்டியில் ஐஸ் ஆக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்பட்டன.

இதில் இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் நோர்வே அணி 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து ஜெர்மனி 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தது. மூன்றாவது இடத்தை கனடா பிடித்தது. அந்த அணி 11 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அமெரிக்கா நான்காவது இடத்தையும், நெதர்லாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கிய ரஷ்ய வீரர்கள் 2 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 13-வது இடத்தை பிடித்தது. ரஷ்யாவை சேர்ந்த இரண்டு வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதில் அலெக்சாண்டர் குருசெல்நிட்ஸ்கீ கர்லிங் விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் ஊக்கமருந்து உபயோகித்தது உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.

ரஷ்ய வீரர்கள் ஐஸ் ஹாக்கி இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர். இதன்மூலம் இந்த ஒலிம்பிக் தொடரில் முதன்முறையாக ரஷ்யாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

இன்றுடன் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. பியாங்சங் நகரில் கோலாகலமாக நடைபெற்ற நிறைவு விழாவில் அமெரிக்கா, வடகொரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே-இன், அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் மகளும், ஆலோசகருமான இவான்கா டிரம்ப், வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங் சோல் உள்ளிட்டோர் நிறைவு விழாவில் கலந்துகொண்டார்.

இந்த விழாவின் போது அனைத்து நாட்டு வீரர்களும் தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர். தொடக்க விழாவை போல இந்த முறையும் வடகொரியா மற்றும் தென்கொரியா வீரர்கள் கூட்டாக அணிவகுப்பில் கலந்துகொண்டனர். ரஷ்ய வீரர்கள் தங்கள் நாட்டு கொடியுடன் அணிவகுப்பில் கலந்துகொள்ள தடை விதிப்பட்டுள்ளதையடுத்து, அவர்கள் ஒலிம்பிக் கொடியை ஏந்தியவாறு அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

நிறைவு விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகார்ப்பூர்வமாக ஒலிம்பிக் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டதும் வானவெடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. அந்த காட்சியை அனைவரும் கண்டுகளித்தனர். இறுதியாக ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீதேவியின் கடைசி வினாடிகள்! (வீடியோ)
Next post மலச்சிக்கலை தவிர்க்க வழிமுறைகள்!!