ஆப்கானிஸ்தானில் எம்.பி.யை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர்; அமெரிக்காவின் எதிர் தாக்குதலில் தவறுதலாக 22 அப்பாவிகள் சாவு

Read Time:2 Minute, 52 Second

ஆப்கானிஸ்தான் எம்.பி.யை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் பதிலடி தாக்குதலில் தவறுதலாக 22 அப்பாவிகள் இறந்தனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பின்னரும், அவர்களின் அட்டகாசம் நீடித்து வருவதால் அவர்களை ஒடுக்க அமெரிக்க உள்ளிட்ட பன்னாட்டு படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. அப்படையினருக்கும், தலீபான்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 2,100 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஒரு எம்.பி.யை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர். அந்த எம்.பி. பெயர் ஹபிபுல்லா ஜன். இவர் காந்தகார் மாகாணம் ஜாரி மாவட்டத்தில் உள்ள ஆப்கன் ராணுவ அலுவலகத்துக்கு சென்றபோது, அவரை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர். ஹபிபுல்லா ஜன், எம்.பி. ஆவதற்கு முன்பாக, ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் நுரிஸ்தான் மாகாணத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தலீபான்கள் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, அம்மாகாணத்தில் வாய்கல் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து அமெரிக்க ஹெலிகாப்டர்கள் குண்டுமழை பொழிந்தன. 2 வாகனங்களை குண்டு வீசி அழித்தன. அதில் சென்றவர்கள் பலியானார்கள். ஆனால் இத்தாக்குதலில் தவறுதலாக அப்பாவிகள் பலியாகி விட்டதாக நுரிஸ்தான் மாகாண கவர்னர் தமிம் நுரிஸ்தானி தெரிவித்துள்ளார். 2 வாகனங்களில் சென்ற 22 அப்பாவிகள் பலியானதாகவும், அவர்களில் ஒரு பெண்ணும், ஒரு குழந்தையும் அடங்குவர் என்றும் அவர் கூறினார். பலியானவர்களின் உடல்கள் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இத்தாக்குதலில் 7 பேர் காயம் அடைந்ததாகவும் அவர் கூறினார்.இந்நிலையில், காந்தகார் மாகாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது கைஎறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எல் சல்வடார் நாட்டில்: ஆற்றில் பஸ் அடித்து செல்லப்பட்டு 29 பேர் பலி
Next post இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 65 வது ஆண்டு விழா