பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என அமெரிக்கா மீண்டும் கோரிக்கை

Read Time:1 Minute, 38 Second

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதங்களை களையப்படவேண்டுமென அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் எனவும் சிறுவர் போராளிகளை இணைத்துக் கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்காவின் பிரதித்தூதுவர் ஜேம்ஸ் அர் மூர் தெரிவித்துள்ளார் இலங்கை வர்தக சம்மேளன அதிகாரிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார் தேர்தல்கள் நியாயமற்ற முறையில் இடம்பெறுவதாகவும் அரசியல் தலையீடுகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தலையீடுகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக்கூடிய வரலாற்று சந்தர்ப்பம் அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கிழக்கில் துணை இராணுவக் குழுக்கள் இயங்குவதாகவும் இதனால் கிழக்கு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னார்குடாப் பிரதேச எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப் படவுள்ளது
Next post பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து கீதாஞ்சன குணவர்தன விலகல்