12 நிமிடத்தில் துபாயில் இருந்து அபுதாபிக்கு செல்லும் வகையில் ஹைபர்லூப் பாட் அறிமுகம்!!

Read Time:2 Minute, 7 Second

அரபு நாடான துபாயில், விமானங்களைவிட அதிவேகமாக செல்லும் ஹைபர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக துபாயில் இருந்து அபுதாபிக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றிடக் குழாய்களுக்குள் ஹைபர்லூப் பாட் எனப்படும் ரெயில் பெட்டி போன்ற சாதனங்களை காந்த விசையைக் கொண்டு அதிவேகமாக உந்தித் தள்ளும் நவீன தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.

மணிக்கு 560 கி.மீ. முதல் 1200 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹைபர்லூப் பாட் துபாயில் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது இதை அறிமுகம் செய்து, அந்த வாகனத்திற்குள் சென்று பார்வையிட்டார். தற்போது சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. தொடக்கவிழாவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டிக்கெட் கட்டண விவரம் விரைவில் வெளியிடப்படும் என ரெயில் திட்டம் மற்றும் வளர்ச்சி அதிகாரி அப்துல் ரெதா அபு அல்ஹசன் தெரிவித்தார். துபாயில் இருந்து அபுதாபிக்கு காரில் சென்றடைய 90 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஹைபர்லூப் மூலம் வெறும் 12 நிமிடங்களில் சென்றடைய முடியும். அபிதாபியில் இருந்து புஜாராய்ராவுக்கு 17 நிமிடத்தில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எளிது எளிது வாசக்டமி எளிது!!
Next post டிடி கண்களுக்கு என்ன ஆனது?