லண்டனில் புலிகள் இயக்க குழு மோதலில் தலைவர் வெட்டிக்கொலை

Read Time:5 Minute, 51 Second

லண்டன் முதலாக ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பிரதான நகரப் பிரதேசங்களிலும் செயற்படும் புலிகள் இயக்கக் குழுக்களிடையே அண்மைக் காலமாக மோதல் நிலை உருவாகி வருவதை லண்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிரபாகரன் பிறந்த ஊராகிய வல்வெட்டித்துறையையும் அண்டிய பிரதேசங்களையும் உள்ளடக்கிய வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த புலிகள் இயக்கத்தினரைக் கொண்ட இரண்டு குழுக்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் முடிவில் குறித்த புலிகள் இயக்கக் குழு ஒன்றின் தலைவரைப் படுகொலை செய்வதில் முடிந்துள்ளது. இதுபற்றி லண்டன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப ஸ்ரீலங்காவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வடமராட்சிப் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட புலிகள் இயக்கத்தின் இரண்டு குழுவினரிடையே கடந்த காலங்களில் இருந்து வந்த தகராறு தீவிரமடைந்த நிலையில் அண்மையில் இரண்டு குழுவினரும் பகிரங்கமாக மோதிக்கொண்டார்கள் எனவும் இதன் பின்னர் குறித்த ஒரு குழுவைச் சேர்ந்த நான்கு புலிகள் இயக்கத்தினர் மற்றக்குழுவின் தலைவரை வெட்டிக் கொன்றுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து லண்டன் பொலிஸாரால் படுகொலைச் சந்தேகத்தின் பேரில் மேற்படி குழுவைச் சேர்ந்த நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த கொலைச் சந்தேக நபர்களாகிய புலிகள் இயக்கத்தினர் மீது லண்டன் பொலிஸ் தரப்பில் சுமத்தப்பட்ட படுகொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் இந்நிலையில், அவர்களுக்கு கொலைக்குற்றத்துக்கான தண்டனை பற்றி நீதிமன்றம் எதிர்வரும் 7 ஆம் திகதி தீர்மானிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட குறித்த புலிகள் இயக்கக் குழுவினர் நான்கு பேராலும் வெட்டிக் கொல்லப்பட்ட புலிகள் இயக்க சக குழுவின் தலைவரின் பெயர் பிரபாகரன் கண்ணன் எனவும் இவர் 28 வயதுடையவர் எனவும் நீதிமன்ற வழக்குத் தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இரண்டு புலிகள் இயக்கக் குழுவினரிடையேயும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலையைச் செய்துள்ள குறித்த குழுவைச் சேர்ந்த நான்கு நபர்களும் கொல்லப்பட்ட குழுத் தலைவர் பிரபாகரன் கண்ணனை வாள்களைக் கொண்டு சகட்டுமேனிக்கு வெட்டியுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி லண்டன் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கைத் தகவல்களுக்கேற்ப எதிரிகள் நால்வரும் பிரபாகரன் கண்ணனை 31 தடவைகள் வாளால் வெட்டிக் கொன்றுள்ளார்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு லண்டன் பொலிஸாரால் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட கொலைச் சந்தேக நபர்களின் பெயர்கள் கிருஷ்நந்தகுமாரண், வபிசன் சிவராஜா, ஐஸ்மியா, ஐஸ்கும்பி எனவும் இவர்களில் இறுதி இரண்டு நபர்களின் இயற்பெயர்கள் அறியப்படாத நிலையில் ஐஸ்மியா, ஐஸ்கும்பி என குறித்த இரண்டு நபர்களும் அழைக்கப்படும் புனைப்பெயர் விபரங்களே அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் லண்டன் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையின் பின்னர் மேற்படி நான்கு நபர்களும் கொலைக்குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் காணப்பட்ட நிலையில், வழக்கு சம்பந்தமான மேலதிக நடவடிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி எடுக்கப்படுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வழக்குத் தவணையாகிய ஜூலை 7 ஆம் திகதி மேற்படி நான்கு நபர்களுக்கும் படுகொலைக் குற்றத்துக்கான தண்டனைகளை நீதிமன்றம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடும் பலரின் மெய்யான நோக்கம் வெளிநாடு செல்வதே! -ரஞ்சித் குணசேகர
Next post கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் குழந்தையை பாதிக்கும்