அமெரிக்க சட்டத்தரணிக்கு மாதாந்தம் ரூபா 1 கோடி ஊதியம் வழங்கும் புலிகள்

Read Time:5 Minute, 22 Second

ஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் உட்பட ஏனைய நகரங்களில் செயற்பட்டு வரும் புலிகள் இயகத்தினர் அமெரிக்க பெடரல் பொலிஸாரால் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பெயரில் கைதுசெய்யப்படும்போதும் நீதிமன்றங்களில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்போதும் மற்றும் ஏனைய சட்டபூர்வ நடவடிக்கைகளின்போதும் புலிகள் இயக்கத்தினருக்காக வழக்காடும் முக்கிய சட்டத்தரணி எனச் செயற்படும் பு?ஸ் பெயின் எனப்படும் அமெரிக்கச் சட்டத்தரணிக்கு பிரபாகரனின் உத்தரவின் பேரில் மாதந்தம் பெருந்தொகைப் பணம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தெரியவந்திருக்கும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு மேற்படி அமெரிக்கச் சட்டத்தரணிகளுக்குப் புலிகள் இயக்கம் ஒரு இலட்சம் டொலருக்கு மேற்பட்ட அமெரிக்கப் பணத்தை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது. இந்தத்தொகை ஸ்ரீ லங்கா பணப் பெறுமதியில் ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகையாகும். இவ்வாறு அமெரிக்காவிலுள்ள புலிகள் இயகத்தினர் மேற்படி அமெரிக்கச் சட்டத்தரணி பு?ஸ் பெயினுக்கு இலட்சக்கணக்கான டொலர் பணத்தொகையை வழங்குவதன் மூலம் அமெரிக்காவில் அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகளின்போது அவருடைய உதவியைப் பெற்றுக்கொள்வதுடன் அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியிலும் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்ட ஏனைய செயற்பாடுகளுக்காகவும் அவருடைய ஆதரவைப் பெற்று வருவதாக மேலும் தெரியவந்துள்ளது. இது அமெரிக்கச் சட்டத்தரணி புஸ் பெயின் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளுடனும் நெருங்கிய தொடர்புகளை உடையவர் எனவும் இவ்வாறு பிரபல சட்ட வல்லுனராக பு?ஸ் பெயின் இருப்பதால் அமெரிக்காவில் செயற்படும் புலிகள் அவருடைய உதவி மூலம் பல்வேறு நோக்கங்களையும் இலகுவாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வகையில் அமெரிக்கச் சட்டத்தரணி பு?ஸ் பெயின் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளுடன் அரசியல் ரீதியானதும் தனிப்பட்டதுமான தொடர்புகளை அண்மைக்காலங்களிலேயே நெருக்கமாக ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இதன் பின்னரே புலிகள் இயக்கத்தினர் அவருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியிலும் அவருடைய உதவிகளைப் பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பு?ஸ் பெயினிடமிருந்து அவர்கள் பெறும் உதவிகள் புலிகள் இயக்கத்துக்கு மிகவும் அத்தியாவசியமானதும் பெறுமதியுள்ளதுமாக இருப்பதாலேயே இவ்வாறு அவரைத் தமது செயற்பாடுகளுக்கான சட்ட உதவியாளராக பிரபாகரனின் உத்தரவின் பேரில் அமெரிக்காவிலுள்ள புலிகள் இயக்கப் பிரமுகர்கள் நியமித்து மாதாந்தம் இலட்சக்கணக்கான டொலர் பணத்தைக் கொடுக்க முன்வந்துள்ளனர்.

இதுபற்றிய தகவல்களின் அடிப்படையில் அண்மையில் ஸ்ரீ லங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சு கருத்துத் தெரிவிக்கையில் உலகம் முழுவதும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக யுத்தம் உட்பட கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் அமெரிக்க ஜனாதிபதி சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை மற்றும் தொடர்புகள் வைத்திருப்பதைக் கடுமையாக எதிர்த்து அறிக்கைகள் விட்டிருக்கும்போது மேற்படி அமெரிக்க சட்டத்தரணி பு?ஸ் பெயின் அவற்றுக்கு எதிராகப் பயங்கரவாதப் புலிகள் இயக்கத்துடன் இவ்வாறு தொடர்பு வைத்திருப்பதை அமெரிக்க அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் இவ்வாறான பயங்கரவாதத் தொடர்பு அமெரிக்கவுக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஏதிரான செயற்பாடு எனவும் இதற்கு எதிராக அமெரிக்க அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post கள்ளத்தொடர்பு வைத்து இருப்பவர்களை காட்டிக்கொடுத்து விடும் நவீன கருவி