90 ஆயிரம் பணி இடத்துக்கான தேர்வு கட்டணம் உயர்த்தப்படவில்லை: ரயில்வே அமைச்சர் விளக்கம்!!

Read Time:1 Minute, 53 Second

‘‘ரயில்வே பணியாளர் தேர்வுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை’’ என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறிதாவது: ரயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, கடந்த மாதமும், இந்த மாதமும் விளம்பரம் செய்யப்பட்டது. விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினருக்கான தேர்வு கட்டணம் 250 ஆகவும், பொது பிரிவுக்கு 500 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. உண்மையாக, அக்கறையுடன் வேலை தேடும் இளைஞர்கள் மட்டுமே இதில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கு முன்பு, பொது பிரிவினருக்கு 100ம், விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் இல்லாமலும் இருந்தது. பலர் விண்ணப்பித்து விட்டு தேர்வு எழுதுவதில்லை. தேர்வுக்காக அரசு நிறைய பணம் செலவழிக்கிறது. எனவே, பணியாளர் தேர்வு எழுதுபவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் திரும்ப கிடைக்கும். 250 செலுத்தி தேர்வு எழுதியவர்களுக்கு முழு தொகையும் திரும்ப தரப்படும். 500 செலுத்திய பொது பிரிவினருக்கு 400 திருப்பி அளிக்கப்படும். இதன் மூலம் சிரத்தையுடன், உண்மையாக வேலைத் தேடுபவர்களை ஊக்குவிக்க நினைக்கிேறாம். இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும்!
Next post வேதனையை விலைக்கு வாங்கலாம்!!