ஜானக பெரேராவுக்கு போட்டியாக கால்களை இழந்த இராணுவ வீரர்

Read Time:1 Minute, 38 Second

லெப்டினன்ட் டென்சில் கொப்பேகடுவையை இலக்கு வைத்து அராலித்துறையில் 1992ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின் போது இரு கால்களையும் இழந்த இராணுவ வீரரான உபாலி விஜயகோன் என்பவரை வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திர கட்சியின் முதன்மை வேட்பாளராக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த உபாலி விஜயக்கோன் நாட்டுக்காக தனது உடற்பாகங்களை இழந்த நான் வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக கூறினார் என தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ போலொரு ஜனாதிபதி ஏற்கனவே இருந்திருந்தால் நாட்டில் எப்போதே பயங்கரவாதத்தை அழித்திருக்க முடியும் எனவும் விஜயகோன் தெரிவித்துள்ளார். 1992ம் ஆண்டு ஊர்காவற்துறையில் நடைபெற்ற கண்ணிவெடி தாக்குதலில் லெப்டினன்ட் கேர்ணல் டென்சில் கொப்பேகடுவ உட்பட பலர் பலியான நிலையில் விஜயகோன் மட்டுமே உயிர் தப்பினார் என்பது குறிப்பிடதக்கதாகும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தசாவதாரத்தில் கதை இல்லை-கமல்
Next post கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அதிக வரப்பிரசாதங்களை கோருகின்றனர் -திவயின தெரிவிக்கிறது