இதுவல்லவோ ஒரிஜினல் ‘அல்வா’ பட்ஜெட்… ஒவ்வொருவர் கணக்கிலும் 15,000: மக்களுக்கு சிங்கப்பூர் அரசு போனஸ்!!

Read Time:2 Minute, 51 Second

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அவரவர் வருமானத்துக்கு ஏற்ப பொதுமக்களுக்கு 14 ஆயிரம் வரை சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பட்ஜெட் புத்தகம் தயாரிக்க தொடங்கும்போது அல்வா கிண்டி பணியை நிதிஅமைச்சர் தொடங்கி வைப்பது வழக்கம். ஆனால் பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகள் அல்வா போல் இனிப்பாக இருக்குமா என்பது சந்தேகம் தான். எனினும், சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ள பட்ஜெட் அந்நாட்டு மக்களுக்கு அல்வாவை போன்றே இனிப்பாக அமைந்துள்ளது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் 2018ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட் இந்த பட்ஜெட்டை தாக்கல் ெசய்தார். இதில் அரசுக்கு 49 ஆயிரத்து 500 கோடி உபரி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து குடிமக்களுக்கும் சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 20.7 லட்சம் பேர் அரசின் இந்த அறிவிப்பால் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு 3450 ேகாடி செலவாகும். அவரவர் வருவாய்கேற்ப இந்த போனஸ் 2018ம் ஆண்டுக்குள் வழங்கப்பட்டு விடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆண்டுக்கு சுமார் 13,76,900 லட்சம் மற்றும் அதற்கு கீழ் வருமானம் உடையவர்கள் 14,752 போனஸாக பெறுவார்கள். 13,76,949 முதல் 49,17,500 வரை வருமானம் பெறுவோருக்கு 9825ம், 49,17,500க்கு அதிகமாக வருமானம் பெறுவோருக்கு 4,917 சிறப்பு போனசாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் சிங்கப்பூர் அரசு சரக்கு மற்றும் சேவை வரியை உயர்த்தியுள்ளது மேலும் உபரி வருவாயில் புதிய திட்டங்கள் மற்றும் முதியோர் இன்சுரன்ஸ் உள்ளிட்டவற்றுக்கும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி வேண்டாம்… அலறும் சந்தானம்… !!
Next post ரகுமானுடன் வீதிக்கு இறங்கிய தாய் – ஏற்பட்ட தர்மசங்கடம்!