இந்தியாவுக்கு ரஷிய அணு நீர்மூழ்கிக் கப்பல்

Read Time:1 Minute, 19 Second

ரஷியாவின் அகுலா வகை அணு நீர்மூழ்கிக் கப்பல் அடுத்த ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும். அந்தக் கப்பலுக்கு “ஐஎன்எஸ் சக்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் தாக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் 10 ஆண்டு குத்தகை அடிப்படையில் வாங்கப்படுகிறது. இக் கப்பலின் பரிசோதனை ஓட்டம் ஜூன் 11-ம் தேதி தொடங்கியது. கடல் சோதனை ஓட்டத்துக்குப் பின்னரே இது இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும். இந்தியா சுயமாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் பணியில் வெற்றி கிடைக்கும் வரை இந்த “ஐஎன்எஸ் சக்ரா’ இந்தியக் கடற்படைக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தக் கப்பலை இயக்குவதற்காக இந்தியக் கடற்படையைச் சேர்ந்த 3 பேருக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post மரண படுக்கையில் உள்ள பின்லேடனை கொல்ல முஷரப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம்