அழிவின் விளிம்பில் 42 மொழிகள்!!

Read Time:1 Minute, 21 Second

தமிழகத்தின் 2 வட்டார மொழிகள் உட்பட இந்தியாவின் தொன்மையான 42 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 22 முக்கிய மொழிகள் மட்டுமின்றி, 100-க்கும் அதிகமான வட்டார மொழிகளும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த 100 மொழிகளில் 42 வட்டார மொழிகளை 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டும்தான் பேசுகின்றனர். இந்த 42 மொழிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 11 மொழிகள், மணிப்பூர் பழங்குடிகளின் 7 மொழிகள், இமாச்சலப்பிரதேசத்தில் 4 மொழிகள், ஒடிசாவில் 3 மொழிகள், கர்நாடகாவில் 2 மொழிகள், தமிழகத்தில் 2 மொழிகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த வட்டார மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காவிரிப் பிரச்சினைக்கு உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு!!
Next post வருவாய் அதிகாரித்தால் மக்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்க அரசு முடிவு!!