ஊசிமுனை ஓவியங்கள்!!

Read Time:7 Minute, 2 Second

தேன் கூடு வலைப் பின்னல் (Honey bee cut work) பட்டு ஜாக்கெட்டின் கழுத்து மற்றும் கை பகுதிகளை, தேன் கூடு போன்ற அமைப்பில் வடிவமைத்து, சேலையில் உள்ள வண்ணத்திற்கேற்ப லைனிங் துணியினை தேன்கூட்டு அமைப்பிற்குள் கொடுத்து, மிகவும் அழகுற நேர்த்தியாக வடிவமைத்து, தேன் கூடு வடிவைச் சுற்றி வாட்டர் ஃபில்லிங் முறையில் டிசைன் செய்து, அதன் அருகில் விருப்பத்திற்கேற்ற சில ஸ்டோன்களையும் ஒட்டி, பார்க்கவே இதயத்தைக் கொள்ளை கொள்ளும் வடிவில், தனது கை வண்ணத்தால், ஊசி முனை கொண்டு, மிகவும் அழகாக, தோழி வாசகர்களுக்காக நேர்த்தியுடன் வடிவமைத்துக் காட்டுகிறார் மோகன் ஃபேஷன் டிசைனிங் நிறுவன இயக்குநர் செல்வி மோகன் தலைமையில் பயிற்றுனர் காயத்ரி.

காயத்ரி, ஃபேஷன் டிசைனர் (மோகன் ஃபேஷன் டிசைனிங் பயிற்சிப் பள்ளி)

“என் கணவரும் ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு, ஆண்களுக்கான ஆடை வடிவமைப்புத் துறை தொடர்பான பணியில் இருந்தார். ஆண்கள் ஆடையகம் என்ற தனிப்பட்ட கடையினையும் நடத்திக் கொண்டிருந்தார். திருமணத்திற்கு பின் நானும் அவர் வழியிலே இயங்கத் தொடங்கினேன். பெண்கள் ஆடைகள் வடிவமைப்பு தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் கற்கத் துவங்கினேன். தொடர்ந்து எனக்குள் ஏற்பட்ட ஆர்வமும், ஈடுபாடும் அதிகமாகவே, வீட்டிலிருந்தே பெண்களுக்கான ஆடைகளை வடிவமைத்து தருவது, உடைகளை மேலும் டிசைன் செய்யத் தேவையான பயிற்சிகளை பெண்களுக்குக் கற்றுத் தருவது என என்னை வளர்த்துக் கொண்டேன்.

எனது இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு மோகன் ஃபேஷன் பயிற்சி நிறுவனத்தில் கற்க வருபவர்களுக்கும் பயிற்சி வழங்கிக் கொண்டிருக்கிறேன். வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் வீட்டிலிருக்கும் பெண்கள், தங்கள் நேரத்தை விரயம் செய்யாமல், முயற்சி செய்து இந்த ஆடை வடிவமைப்பு கலையினைக் கற்றுக்கொண்டால், வீட்டிலிருந்து கொண்டே நல்ல வருமானம் ஈட்டலாம். மேலும் நமக்குத் தேவையான உடைகளையும் நம் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கலாம்.”

தேவையான பொருட்கள்

ஜாக்கெட் துணி, ஆரி ஊசி, ஷரி நூல், எம்ராய்டிங் நூல், சாதா ஊசி மற்றும் மெஷின் நூல், வொயிட் ஸ்டோன், ஃப்ளவர் ஸ்டோன், கோல்டன் ஸ்டோன், சிறிய கோல்டன் பீட்ஸ், பேப்ரிக் கம், மெல்லிய கோல்டன் ஷர்தோசி, ஊதுபத்தி மற்றும் தீப்பெட்டி, கத்தரிக்கோல், மார்க்கர், ஆரி ஸ்டாண்ட் வித் உட் ஃபிரேம்.

1 வடிவமைக்க போகும் ஜாக்கெட்டின் தேவையான பகுதியினை உட் ஃபிரேமில்
டைட்டாக இழுத்து இணைத்து, அதை ஆரி ஸ்டாண்டின் மேல் பொருத்தி, கழுத்தின் வடிவத்தை மார்க்கர் கொண்டு வரையவும்.

2 கோல்டன் கலர் ஷரி நூலை உட் ஃபிரேமின் அடிப்பகுதியிலிருந்து ஆரி ஊசி
முனையில் மேலிழுத்து இணைத்து சங்கிலி வடிவ தையல் போடவும்.

3 படத்தில் காட்டியுள்ளதுபோல் ஒரு இஞ்ச் இடைவெளியில் அருகருகே ஒரே மாதிரி தையல் போட்டு நடுவில் குறுக்கு டிசைனில் அதே போன்று சங்கிலித் தையலால் ஷரி நூல் கொண்டு இணைக்கவும்.

4 ஆங்கில வடிவ ஸ்மால் ‘எம் மற்றும் டபிள்யூ’(m ,w) எழுத்து அமைப்பில் மாற்றி மாற்றி தேன் கூடு வடிவிற்கு அருகிலே, ஆமீபா தையல் என அழைக்கப்படும் வாட்டர் ஃபில்லிங் மெத்தட் ஷரி நூல் கொண்டு வடிவமைக்கவும். அதன் அருகில் வொயிட் ஸ்டோன், ஃப்ளவர் ஸ்டோன், கோல்டன் ஸ்டோன், கோல்டன் பீட்ஸ் இவைகளை பேப்ரிக் கம் கொண்டு ஒட்டி அதைச் சுற்றி இதில் காட்டியுள்ளது போன்ற விரும்பிய டிசைன்களை போடவும்.

5 ஊதுபத்தி முனையை நெருப்பிட்டு, அதை தேன் கூட்டு வடிவ டைமன் அமைப்பிற்குள் உள்ள துணி மேல் வைத்து படத்தில் காட்டியுள்ளதுபோல் துளையிடவும்.

6 ஜாக்கெட்டின் கை பகுதியில் கையின் வடிவத்தை வரையவும்.

7 இதில் காட்டியுள்ளதுபோல் வளைவு வளைவாக தேன் கூடு வடிவை ஆரி ஊசியால் ஷரி நூலில் வடிவமைக்கவும்.

8 கை பகுதியிலும் ஊதுபத்தி முனை நெருப்பில் தேன் கூட்டு அமைப்பில் துளையிடவும்.

9 கழுத்து மற்றும் கையில் உள்ள தேன் கூடு வடிவ துளையின் கீழ் பகுதிகளில் சேலை வண்ணத்தில் உள்ள கலரில் லைனிங் துணியினை வெளியில் தெரியும் வண்ணம் கொடுத்து தைத்து, ஜாக்கெட்டின் கை மற்றும் உடல் பாகத்தை இணைக்கவும். படத்தில் உள்ளதுபோல், கட் ஒர்க் வேலைப்பாடு அழகாக தெரியும்.

விலை உயர்வாக எடுக்கப்பட்ட சில சேலைகளை கூடுதல் எடுப்புடன் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகில் வெளிப்படுத்த நினைக்கும் பெண்கள் இந்த மாதிரியான சில வேலைப்பாடுகளை செய்து கூடுதல் அழகாக்கலாம். இந்த கட் ஒர்க் வேலைப்பாட்டிற்கு எடுக்கும் நேரத்தைப் பொறுத்து 3000 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுமுறிப்புக் குளத்தில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு!!
Next post ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2.096 சதவீதம் உயர்வு!!