தண்டவாளத்தில் முத்தம்-காதலி பலி, காதலன் கால் ‘கட்’!

Read Time:1 Minute, 56 Second

ரயில் வருவதை கூட கவனிக்காமல், தண்டவாளத்தில் முத்தமிட்டபடி நடந்த காதல் ஜோடி மீது ரயில் மோதியது. இதில், காதலி பரிதாபமாக உயிரிழந்தார். காதலனின் கால் துண்டிக்கப்பட்டது. ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் என்ற ஊரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ரயில் நிலைய தண்டவாளப் பகுதியில் ஒரு இளம் ஜோடி ரொமான்டிக் மூடில் போய்க் கொண்டிருந்தது. அப்போது காதலனும், காதலியும் அழுத்தமாக முத்தமிட்டிபடி நடந்துள்ளனர். அந்த சமயத்தில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. அதை காதல் ஜோடி கவனிக்கவில்லை. அந்த மன நிலையிலும் அவர்கள் இல்லை. காதல் ஜோடி தன்னிலை மறந்து நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்த ரயில் என்ஜின் டிரைவர் பலமாக ஹாரன் அடித்து எச்சரித்துப் பார்த்தார். ஆனால் காதல் ஜோடியின் காதில் அது விழவில்லை. காரணம் பக்கத்து டிராக்கில் போய்க் கொண்டிருந்த சரக்கு ரயிலின் சப்தத்தில் ரயிலின் ஹாரன் அவர்களுக்கு கேட்கவில்லை. பயணிகள் ரயில் மிக அருகில் வந்தபோதுதான் காதலி அதைக் கவனித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் தனது காதலனை அருகில் பிடித்து தள்ளி விட்டார். அவரும் தப்பிக்க முயன்றபோது ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வேகமாக தள்ளப்பட்ட காதலனின் கால், ரயிலில் சிக்கி துண்டாகி விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு கறுப்பு ஜூலையை அனுஷ்டிக்க புலிகள் திட்டம்
Next post வீடு வாங்கினால் வீட்டு எஜமானியை திருமணம் செய்யலாம்: ஏல இணையதளத்தில் ஒரு வினோதமான அறிவிப்பு