மகிழ்ச்சி அளிக்கும் மேக்கப் பிசினஸ்!!

Read Time:5 Minute, 52 Second

சென்னையை சேர்ந்த சரண்யாவுக்கு மேக்கப் என்றால் உயிர். சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பிசியாக வேலை பார்க்கும் பெண். தன் விருப்பத்துக்காக மேக்கப் கற்றுக் கொண்டு வீக்கெண்டையும் பிசியாக வைத்திருப்பவர். அலுவலகம் தவிர கிடைக்கும் நேரங்களில் எங்காவது மேக்கப் போட புக் ஆகியிருப்பார். இவ்வளவு பிசியான சரண்யாவை நாம் ஆன்லைனில் பிடித்து விடலாம். “பெற்றோருக்காக சாஃப்ட்வேர் கம்பெனியில் கடமையே கண்ணாக உழைக்கிறேன்.

எனக்கே எனக்காக மேக்கப் வுமனா அவதாரம் எடுக்கிறேன்” எனும் சரண்யா வாடிக்கையாளர்களின் முகத்தில் மகிழ்ச்சி மின்னலைப் பார்ப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கிறார். ஐ.டி. நிறுவன வேலை நெருக்கடி களையும் தாண்டி பியூட்டி பிசினசையும் சரண்யா திறம்பட நடத்த காரணம்தான் என்ன? இனி சரண்யா… ‘‘சின்ன வயசுல இருந்தே மேக்கப் மேல ஒரு கண் இருந்தது. அதுவும் காதல் கண். அதனாலதான் மேக்கப்ப எப்பவும் என்னால விட முடியல. மேக்கப் பிடிச்சிருந்தாலும் அதையே முழுநேர தொழிலா நம்பி இறங்க வீட்ல அம்மா, அப்பாகிட்ட இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கல. அவங்களுக்காகத்தான் இந்த சாஃப்ட்வேர் படிப்பு, ஐ.டி வேலை எல்லாம்.

அவங்க மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு ஐ.டி.ல வேலை பார்க்கறேன். என்னோட மனசு சந்தோஷத்துக்காக மேக்கப்னு வீக்கெண்ட்ல டைம் கிடைச்சப்ப எல்லாம் ஹைதராபாத் போய் மேக்கப் கத்துட்டேன். அப்பப்போ என்னை அப்டேட் பண்ணிப்பேன். சின்னச் சின்ன பார்ட்டி மேக்கப்ல தான் என்னோட பியூட்டி பிசினஸ் துவங்கியது. அலுவலகத்தில் இருக்கும் போது போனை எடுக்கவே கூடாது. அதனால அங்கே வேலை மட்டும் தான். அலுவலக நட்பு வட்டத்துல நான் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்கிற விஷயமே பலருக்கும் தெரியாது. என் ஸ்மார்ட் போன ஆன் பண்ணிட்டாப் போதும். புக்கிங், வீக்கெண்ட் போட்டோ ஷூட்னு என்னோட மேக்கப் வேலைக்கான தேடல்கள் துவங்கும். ஆபீஸ் விட்டு வந்ததும் ஒரு நிமிஷத்தக் கூட நான் வேஸ்ட் பண்ணினதில்லை. என்னோட தொடர் முயற்சியால பிரைடல் மேக்கப்புக்கான வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. ஃபிரீலான்சரா பண்றதால முதல்ல வருமானத்துக்காகப் பண்ணலை. மேக்கப் வெரைட்டி, காஸ்ட் எல்லாம் சொல்லிடுவேன். அவங்க பட்ஜெட்டுக்கு ஏத்த பேக்கேஜ் பண்ணிக் கொடுப்பேன்.

மேக்கப், டிரஸ்ஸிங், ஹேர்ஸ்டைல் ஒவ்வொண்ணுலயும் கிரியேட்டிவா சின்னதா என்னோட பஞ்ச் இருக்கும். அது அவங்களுக்கும் பிடிக்கும். மேக்கப் ஆரம்பிச்சதில இருந்து ஒவ்வொன்றும் போதுமான்னு கேட்டுப்பேன். மேக்கப் போட்டு முடிச்ச பின்னாடி அதுவே ஓவரா தெரியக் கூடாதில்லையா. அவங்களோட அழக மெருகூட்டறதாத்தான் மேக்கப் இருக்கணும். மேக்கப் போடறதுக்கு முன்னால நிறையப் பேசி அவங்க எதிர்பார்ப்பு, விருப்பம் எல்லாம் தெரிஞ்சிப்பேன். அதற்கு ஏற்ற மாதிரி மேக்கப்லயும் புது விஷயங்கள சேர்த்திருப்பேன்.

ஒரு காலத்துல பார்ட்டி மேக்கப் மட்டும் தான் கிடைக்கும். இப்போ முகூர்த்தம் புல்லா பிசியா இருக்கேன். நிறைய வாய்ப்புகள் கிடைக்குது. பெஸ்ட் ஹேர்ஸ்டைலிஸ்ட்ன்ற பேர் வாங்கணும். அதுக்காக ஹேர்ஸ்டைல்ல நிறைய கத்துக்கறேன். எதற்காகவும், எப்பவும், யாருக்காகவும் நான் பியூட்டி பிசினஸை விடமாட்டேன். ஐ.டி. நிறுவன வேலை தர்ற டென்சன் எல்லாம் மேக்கப் போடும்போது பேக்கப் ஆயிடும். ஒரு நாளுக்கு இரவு, பகல்னு ரெண்டு அடையாளங்கள் இருக்கிற மாதிரி நானும் ரெட்டைப் பெண்ணாய் றெக்கைக் கட்டிப் பறக்கிறேன். எப்படியும் எட்டு மணி நேரம் தூங்கிடுவேன். வேலைக்கு இடையிலும் வேளைக்கு சாப்பிட்டுவிடுவேன். பக்கா பர்ஃபெக்ட் பொண்ணு. அதனாலதான் என்னால இத்தனை வேலைகளையும் திட்டமிட்டுப் பண்ண முடியுது’’ என்கிறது இந்த பியூட்டி. பெண்கள் நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லையல்லவா!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொண்டையில் சிக்கிய முள்!!
Next post ஹீரோயினுக்கு கைகுலுக்கி தாத்தா நடிகர் சேட்டை!!