தசாவதாரத்தில் கதை இல்லை-கமல்
தசாவதாரம் படத்தில் கதை இருப்பதாக நான் ஒன்றும் சொல்லவேயில்லையே… நான் போட்ட பத்து வேடங்களுக்காக உருவாக்கப்பட்ட படம்தான் தசாவதாரம், என்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். தசாவதாரம் படத்துக்கான பப்ளிசிட்டி விசிட்டாக சமீபத்தில் கேரளாவுக்கு வந்த கமல்ஹாசன், கொச்சியில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: தசாவதாரம் படத்தில் கதை இல்லை எனக் குறைபட்டுக் கொள்வபவர்களுக்காக ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தப் படத்துக்காக கதை என்று எதையும் நான் எழுதவில்லை. கதையே இல்லாத படம்தான் தசாவதாரம். எனது பத்து வேடங்களுக்காக எடுக்கப்பட்ட படம் தசாவதாரம். முதலில் என் மனதுக்குள் 10 வேடங்கள் வந்தன. அதை அப்படியே டெவலப் செய்தோம். ஒரு பொதுவான லிங்க் கிடைத்தது. அதை கதை என்றும் சொல்லலாம். பின்னர் மாதக் கணக்கில் இந்தக் கேரக்டர்களை செம்மைப் படுத்தினோம். இடையில் இதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளம். படம் வெளியாகிவிட்டது. நீங்களும் சந்தோஷமாக இருக்கிறீர்கள். அது போதும்… இந்தப் படத்தில் பஞ்தசாபி பாடகர் கேரக்டர் பற்றி நிறைய விமர்சனங்கள். ஒரு துப்பாக்கி குண்டு எப்படி அவரது தொண்டையிலிருந்த கேன்சரை அகற்றும் என்று. இந்த விஷயத்தை நான் பிடித்ததே எங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவத்திலிருந்துதான். எம்ஜிஆர் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட போது அவருக்கு குரல் போய்விடும் என்றார்கள். ஆனால் அவர் முன்னிலும் வேகமாகப் பேசவில்லையா, நடிக்கவில்லையா… அதுபோன்ற ஒரு நிகழ்வு இது என்று எடுத்துக் கொள்ளுங்களேன்… இந்தக் காட்சியைப் பற்றி வேறு ஒரு இயக்குநரிடம் முதலில் சொல்லி ஆலோசனைக் கேட்டேன். ஆனால் அவர் இதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் என் நண்பரும் படத்தின் இயக்குநருமான கே.எஸ். ரவிக்குமார் ஒப்புக் கொண்டார். இந்த ஐடியா பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகும் என்றார். அப்படியே நடந்தது. இந்தப் படத்தின் வசூல் நிலவரம் குறித்து நான் என்னவென்று சொல்வது… என் வாழ்க்கையில் இதுவரை இப்படியொரு பெரிய வசூலைக் கண்டதே இல்லை.
இனி என் அடுத்த இலக்கு மர்மயோகி. இந்தப்படம் முழுக்க முழுக்க டிஜிட்டலில் எடுக்கப்பட உள்ளது. வெளிநாட்டுக் கலைஞர்கள் பலர் பங்கேற்கும் மிகப் பெரிய படம் இது, என்றார் கமல்.
மலையாளத் திரையுலகில் தற்போது நிலவும் சண்டைகள், குழப்பங்கள் குறித்து பல நிருபர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணமிருந்தனர்.
அதற்கு பதிலளித்த கமல், தொடர்ந்து படம் எடுத்தால்தான் இதுபோன்ற அமைப்புகள் உயிருடன் இருக்க முடியும் அதைப் புரிந்து கொண்டால் சரி, என்றார் தன் ஸ்டைலில்….. நெத்தியடி!
3 thoughts on “தசாவதாரத்தில் கதை இல்லை-கமல்”
Leave a Reply
You must be logged in to post a comment.
Kamal is an artiste to whom there is no equal person.
His dedication towards his work will take him to more
and more heights.
the world is opn of the sournd in c
தோழரே ,
கமலகாசன் அவர்கள் இந்த படத்தில் கதையே கிடையாது என்று கூறுகிறார் . ஆனால் படத்தில் முதலில் எழுத்துக்கள் போடும்போது ” கதை மற்றும் திரைகதை கமலகாசன் ” என்று குரிபிட்டுள்ளர்கலே .. அதற்க்கு பதில் ” இப்படத்தில் கதை இல்லை கதாபாத்திரம் மட்டுமே ” என்று குறிப்பிட்டு இருக்கலாமே ” . மைக்கை பிடிப்பவர்கள் எல்லோருமே அறிவாளிகள் ஆகிவிட முடியாது …