புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்!
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது பாலி அன் சாட்டுரேட்டட் ஃபேட்டி ஆசிட். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஏனென்றால் இதனை நம் உடலே தானாகவே உற்பத்தி செய்யாது. நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக மட்டுமே அதனை எடுக்க வேண்டும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஏன் தேவை? இருப்பதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் உட்பட பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
வகைகள் : ஒமேகா 2 ஃபேட்டி அமிலம் விலங்குகள் மற்றும் செடிகளில் இருக்கிறது.ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இரண்டு வகைப்படும்.
1.மரைன் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட். இதில் docosahexaenoic மற்றும் Eicosapentaenoic ஆகிய அமிலங்கள் கலந்திருக்கும். இவை மீன்களில் மட்டுமே இருக்கும்.
2.அல்ஃபா லினோலெனிக் அமிலம். இவை நட்ஸ், விலங்குகளின் கொழுப்பு,ஆளி விதை,வெஜிடபிள் ஆயில் போன்றவற்றில் தான் நிறைந்திருக்கும்.
கொலஸ்ட்ரால் : உடல் எடையை குறைப்பதற்கான முக்கிய வழிகோல் டயட் தான். நாம் சாப்பிடும் உணவுப்பழக்கங்கள் மூலமாகவே பல்வேறு நோய் வருவதை முன் கூட்டியே தடுக்க முடியும். இன்றைக்கு கொழுப்பு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமானது கொழுப்பு நிறைந்த, எண்ணெயில் பொறித்த, ஜங்க் ஃபுட் ஆகியவற்றை தொடர்ந்து எடுப்பது, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது ஆகியவை தான் முக்கிய காரணியாக இருக்கிறது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ரத்தத்தில் இருக்கும் triglycerides குறைக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேராமல் தவிர்த்திடலாம்.
ரத்த அழுத்தம் : அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ஒமேகா 3 மிகச்சிறந்த மாற்றாக அமைந்திடும். தினமும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டு வந்தால் அது ரத்த அழுத்தத்தை குறைத்திடும். உணவுகளில் அடிக்கடி மீன், ஆளி விதை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
இதயம் : ஒமேகா 3 இதயத்தை காத்திடும். இதய நோய் வராமல் தடுப்பதற்கான முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியவைகளில் ஒன்று இது தான். உங்கள் டயட்டில் அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மட்டும் கட்டுப்படுத்தக்கூடியதல்ல மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றையும் வராமல் தடுத்திடும்.
சர்க்கரை நோய் : இந்தியர்களை பெரிதளவு பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முதன்மையானது இந்த சர்க்கரை நோய். இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் வயது வித்யாசமின்றி பலரும் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு ஹெச் டி எல் அளவு குறைவாகவும் ட்ரிக்ளைசிடை அளவு அதிகமாக இருக்கும். ஒமேகா 3 எடுத்துக் கொண்டால் இந்த் அளவை சீராக பராமரிக்க உதவும்.
ஆர்த்ரைட்டீஸ் : நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் உண்டாகும் முக்கியமான நோய்களில் ஒன்று ஆர்த்ரைட்டீஸ். ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால் இது எலும்பு மற்றும் மூட்டினை வலுவாக்கும். ஒமேகா 3 தினமும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் விரைவில் ஸ்டிராய்டு மருந்துகளை தவிர்த்திடலாம்.
லூப்பஸ் : சருமத்தில் தோன்றிடும் பாக்டீரியா தொற்று தான் லூப்பஸ். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதினால் ஏற்படுகிறது. சில சமயங்களில் இது உள்ளுருப்புக்களையும் பாதிக்ககூடும். இதிலிருந்து மீள மாத்திரை மருந்துகளைத் தாண்டி உணவுக்கட்டுப்பாடு தான் முக்கியமான தீர்வாக இருக்கிறது. காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்வது,தேங்காய் எண்ணெய்,ஆலிவ் ஆயில் ,மீன் எண்ணெய் மாத்திரை ஆகியவற்றை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் இந்நோய் வராமல் தவிர்த்திடலாம்.
எலும்பு : ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நம் உடலில் இருக்கும் கால்சியம் அளவை அதிகரிக்கும். இதனால் இது எலும்புகளை வலுவாக்கிடும். இதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் வயதானதும் ஏற்படக்கூடிய ஆர்த்ரைட்டீஸ், ஓஸ்டியோபொராஸிஸ் ஆகிய எலும்பு தொடர்பான நோய்களை தடுக்க உதவிடும்.
மன அழுத்தம் : இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை பலருக்கும் ஸ்ட்ரஸ் நிறைந்ததாகவே இருக்கிறது. இது அதிக வேலைப்பளுவினால் மட்டும் உண்டாவது அல்ல. முறையான உணவுப்பழக்கம் இல்லையென்றாலும் இப்படித் தான் தோன்றிடும். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் எடுத்துக் கொண்டால் இந்த தொல்லை உங்களுக்கு இருக்காது.
பைபோலார் : பைபோலார் டிஸாடர் என்பது ஒரு வகையான மனநோய். நிலையான ஒரு மனநிலை இருக்காது. சமூகத்துடன் ஒன்றி வாழ்வதில் சிக்கல் ஏற்படும். இதனை தீர்க்க வேண்டுமானால் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை எடுத்துக் கொள்வதால் மூளையின் செயல்பாடுகள் சீராகும்.
எது உண்மை எது நிஜம் ? : Schizophrenia என்பது நீங்கள் உணர்வது,யோசிப்பது, நடந்து கொண்டிருப்பது மூன்றையும் குழப்பிடும். எது உண்மை எது கற்பனை என்பதில் உங்களுக்கு தடுமாற்றங்கள் இருக்கும், ஒமேகா 3 சத்து தொடர்ந்து எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்சனையை தீர்த்திடலாம்.
ஹைப்பர் ஆக்டிவிட்டி : இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவிட்டி இருக்கிறது. இது அவர்களின் உடலில் ஃபேட்டி ஆசிட் குறைவதினால் தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு தூக்கம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படும்.
சருமம் : ஒமேகா 3 உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பயன்படுகிறது. தொடர்ந்து உணவுகளில் ஒமேகா 3 எடுத்துக் கொண்டால் அது சருமத்தில் தோன்றும் கரும்புள்ளி, வறட்சி, பருக்கள் ஆகியவை வராமல் தடுத்திடும். இது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களிலிருந்தும் உங்களை காத்திடும்.
ஆஸ்துமா : ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆஸ்துமாவைக் குறைக்கும் . ஒமேகா 3 நுரையிரல் செயல்பாட்டினை துரிதப்படுத்துகிறது. ஆஸ்துமாவின் அறிகுறிகளான இளைப்பு, இருமல் ஆகியவற்றை தடுத்திடும். தினமும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடலாம். மீன் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
மாதவிடாய் : பெண்களுக்கு அவர்களின் மாதவிடாயின் போது அதீதமான வலி உண்டாகும். அத்துடன் வயிற்றுப்போக்கு, தலைவலி, போன்றவையும் உண்டாகும். உணவு இந்த அறிகுறிகளை எல்லாம் கட்டுப்படுத்திடும் சாதனமாக விளங்குகிறது. கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒமேகா 3 அதிகம் சேர்த்துக் கொண்டால் மாதவிடாயின் போது ஏற்படுகிற வலியை குறைத்திடும்.
குடல் புற்றுநோய் : பெருங்குடலில் ஏற்படக்கூடிய புற்றுநோயை ஒமேகா 3 குறைத்திடும். பெருங்குடலில் சின்ன சின்ன கட்டிகள் போல முதலில் தோன்றிடும். பின்னர் அது புற்றுநோயக் கட்டியாக மாறிடும். வயதானவர்களுக்கு இது ஏற்படுவது சகஜம் தான் ஆனால் எல்லா கட்டிகளும் புற்றுநோயாக மாறிடும் என்று சொல்ல முடியாது. முறையான உணவுப்பழக்கம் மூலமாக அதனை தடுத்திட முடியும். விட்டமின் டி நிறைந்த உணவுகளையும்,ஒமேகா ஆசிட்டையும் அதிகமாக நம் உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நாம் இந்தப் பிரச்சனையை தவிர்த்திட முடியும். இந்த பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
ப்ரோஸ்டேட் கேன்சர் : ஆண்களுக்கு ஏற்படக்கூடிய புற்று நோய்களில் முதன்மையானது ப்ரோஸ்டேட் கேன்சர். இதன் ஆரம்ப கால அறிகுறிகள் தனியாக தெரியாது என்பதால் ஆரம்பத்தில் தெரியக்கூடிய சின்ன சின்னப் பிரச்சனைகள், ஏற்படும் போதே சோதனை செய்து கொள்வது அவசியம். இதனைத் தவிர்க்க சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் குறிப்பாக ஒமேகா 3 நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அல்சைமர் : வயதாவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனை அல்சைமர். பி விட்டமின்ஸ் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை அல்சைமர் பாதிப்பு வராமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக ஒமேகா 3 மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. அத்துடன் நம் நரம்பு மண்டலத்தையும் மேம்படுத்துகிறது. மீன், சோயா பீன்ஸ்,வால்நட் போன்றவற்றை சாப்பிடலாம்.
Average Rating