கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருளுடன் 27 பேர் கைது!!

Read Time:1 Minute, 33 Second

சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் நேற்று (17) இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிலியந்தலை, கெஸ்பேவ, களுத்துறை, ஹோமாகம மற்றும் கொழும்பு பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்களும், ஹெரோயின் பக்கட்களும் கைப்பற்றப்பட்டன.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று இரவு வாகனங்களை தீடிரென ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் சோதனை செய்தனர்.

இதன்போது 8 மில்லிகிராம் ஹெரோயினும், 59,750 மில்லிகிராம் கஞ்சா பக்கட்களும் கண்டு பிடிக்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த 27 பேரையும் கைது செய்த ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் 2ம் வகுப்பு குழந்தைகளை காத்த தமிழக ஆசிரியையின் துணிச்சல்!!
Next post ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் விபத்து : 100 பேர் உயிரிழப்பு?