ஒரு கோடியே 20 லட்சம் தேனீக்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது

Read Time:1 Minute, 41 Second

கனடா நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலை, நிïபரன்ஸ்விக்கில் உள்ள செயிண்ட் லியோனார்டு நகரில் உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு லாரி கவிழ்ந்தது. இதில் 330 கிரேட்ஸ்களில் தேனீக்கள் எடுத்து செல்லப்பட்டன. லாரி கவிழ்ந்ததால் அதில் பயணம் செய்த தேனீக்கள் வெளிவந்தன. அவை சாலை வழியாக செல்லும் வாகனங்களுக்குள் புகுந்தன. கார்களின் பானெட்டுகளை மொய்த்தன. இதனால் அந்த சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதை தொடர்ந்து தேனீ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்போது மழை பெய்ததால் அது தேனீக்களின் தொல்லையை குறைக்க உதவியாக இருந்தது என்று போலீசார் கூறினார்கள். தேனீ வளர்ப்பவர்கள் வெள்ளைநிற பாதுகாப்பு படை அணிந்து தேனீக்களை கூட்டுக்கு திரும்பக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். செய்தி சேகரிக்க சென்ற நிருபர் ஒருவர் கவிழ்ந்து போன லாரி அருகே சென்றபோது தேனீக்கள் திரும்ப திரும்ப கொட்டின. அதை தவிர தேனீக்கள் கொட்டியதால் யாரும் பெரிய அளவில் காயம் அடையவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது; ராணுவ வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..