தொப்பை குறைய, இதய நோய் விலக…!!
பழங்களில், கொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை ஆகியவற்றில் ஏராளமான சத்து நிறைந்துள்ளது. எண்ணற்ற நோய்களில் இருந்து நமக்கு விடுதலை தருகிறது. மலச்சிக்கல் துவங்கி, இதய நோய் வரை அனைத்தையும் குணப்படுத்துகிறது. இவற்றில் உள்ள பலன்கள் இதோ…
கொய்யாப்பழம்: இது, விலை மலிவாக கிடைக்கும் பழங்களில் ஒன்று. இதில், வைட்டமின்-சி அதிகம் உள்ளது. வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும், உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெறுமனே சாப்பிட பிடிக்காதவர்கள் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடலாம். சொறி, சிரங்கு மற்றும் ரத்தச்சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. வைட்டமின்-பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்த கொய்யா, தோல் வறட்சியை போக்குவதுடன் முதுமை தோற்றத்தை குறைத்து, இளமையை மிளிர செய்யும்.
பப்பாளி: ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்கள் வரிசையில் பப்பாளியும் ஒன்று. இதில், வைட்டமின்-ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. பல் தொடர்பான குறைபாட்டை போக்கும். சிறுநீர் பையில் ஏற்படும் கற்களை கரைக்கும். நரம்புகள் வலுப்பெறும். ஆண்மை பலம், ரத்த விருத்தி பெருகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பெண்களை பாடாய்படுத்தும் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய நல்லதொரு மருந்தாக பப்பாளி உள்ளது. இதில் உள்ள கரோட்டின் சத்து, புற்றுநோய்க்கு எதிரியாகும். நுரையீரல் புற்று, உணவுக்குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கக்கிறது. பழுக்காத பப்பாளி பழத்தை (நன்கு கனியாதது) தினமும் 250 கிராம் அளவு, உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். செரிமான கோளாறு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் தீரும்.
அன்னாசி: அன்னாசி பழத்தில் வைட்டமின்-பி உயிர்சத்து உள்ளது. இது, உடலுக்கு பலம் தருவதுடன், ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசி பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், மினரல் போன்ற முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் உள்ள மினரல் சத்து, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது. கொழுப்பு சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள அன்னாசி, இதய நோய் வராமல் தடுக்கிறது. தொப்பை, பலரை பாடாய்படுத்துகிறது. இதை குறைக்க, அன்னாசி நல்ல மருந்து. அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு டேபிள் ஸ்பூன் பொடியாக்கிய ஓமம் கலந்து, சிறிது நீர் ஊற்றி காய்ச்ச வேண்டும். பின்னர் அதை, ஒரு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் எழுந்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாள் குடித்து வந்தால், தொப்பை குறையும். மிளகு ரசத்துடன் அன்னாசி பழம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
மாதுளை: இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம், இதயம், மூளை போன்றவற்றுக்கு சக்தி தரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்று கடுப்பை போக்கும். ரத்தபேதிக்கு நல்ல மருந்து. தடைபட்ட சிறுநீரை வெளியேற்ற உதவும். குடல் புண்ணை ஆற்றும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாற்றை அருந்தினால் பலன் கிடைக்கும். கர்ப்பகால ரத்தசோகையை போக்கும். உடல்சோர்வை போக்க மாதுளம்பழத்தின் சாற்றுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். கடுமையான இதய வலியை குணமாக்க மாதுளை நல்ல மருந்து. மாதுளம் பழத்தின் மேல்புறம் ஓட்டை போட்டு, அதன் உள்ளே 15 மில்லி பாதாம் எண்ணெய் ஊற்றி, பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தினால் பழத்துடன் எண்ணெய் கலந்துவிடும். பிறகு அந்த பழத்தை சாப்பிட்டால் கடுமையான இதய வலி நிற்கும்.
வாழை: இயற்கையாகவே வாழைப்பழங்களில் அமில எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், நெஞ்செரிச்சல் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தை சாப்பிடலாம். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அந்த பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால், வாழைப்பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிப்பதால் ஏற்படும் நிக்கோடினை சிறிது சிறிதாக குறைக்க உதவும். இதன்மூலம் புகைபிடிப்பதில் இருந்து விடுபட முடியும்.
Average Rating