விம்பிள்டன் டென்னிஸ் 2008: மகளிர் அரையிறுதியில் வீனஸ், செரினா, ஜெங் ஜி, டெமன்டீவா

Read Time:2 Minute, 48 Second

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் விளையாடுவதற்கு அமெரிக்காவின் வீனஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகளும், சீனாவின் ஜெங் ஜி மற்றும் ரஷ்யாவின் டெமன்டீவா ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், தாய்லாந்தின் புதுமுக இளம் வீராங்கனை தாமரின் தானாசுகர்னை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதிபெற்றார். மற்றொரு போட்டியில் செரினா வில்லியம்ஸ் 6-4, 6-0 என்ற நேர் செட்டில் போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தார். மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் எலினா டெமன்டீவா, சக நாட்டு வீராங்கனை நாடியா பெட்ரோவாவை 6-1, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல்முறையாக விம்பிள்டனில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். 4வது காலிறுதி ஆட்டத்தில், தரநிலைப் பட்டியலில் 133வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஜெங் ஜி, 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் நிகோலி வைடிசோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதனிடையே நாளை மறுதினம் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ், எலினா டெமன்டிவாவுடனும், செரினா வில்லியம்ஸ் ஜெங் ஜியுடனும் மோதுகின்றனர். இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்று வில்லியம்ஸ் சகோதரிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இரண்டு தடவைகள் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் மோதியுள்ள வில்லியம்ஸ் சகோரிகள்களில் இரு முறையும் செரினா வெற்றிபெற்றிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினந்தோறும் கிளாமர் படங்கள்..
Next post கருணாஅம்மன் இலங்கை திரும்பினார்