இளம் கிரிக்கெட் வீரருடன் தமிழ் நடிகை காதல்!!

Read Time:3 Minute, 20 Second

கிரிக்கெட் வீரர்கள் பலர் திரைப்பட ஹீரோயின்களுடன் டேட்டிங் செய்திருப்பதுடன், காதல் விவகாரங்களிலும் சிக்கி உள்ளனர். மாஜி கிரிக்கெட் கேப்டன் தோனியுடன் நடிகை லட்சுமிராய் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். தோனியின் வாழ்க்கை திரைப்படமானபோது அதில் தனக்கும் தோனிக்கும் இடையிலான உறவுபற்றி சித்தரிக்கவில்லை என்று லட்சுமிராய் பகிரங்கமாக பேட்டி அளித்தார். மேலும் அவர் இந்தியில் கதாநாயகியாக நடித்த ஜூலி 2ம் பாகத்தில் கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்வதுபோன்ற காட்சி வைத்து பழிதீர்த்துக்கொண் டார் என்று சொல்வதுண்டு.

தற்போதைய கேப்டன் விராத் கோஹ்லியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் பல வருடங்களாக டேட்டிங் செய்து வந்தனர். இருவரும் காதலிப்பதாக தகவல் வந்தபோதெல்லாம் அதை மறுத்து வந்தனர். திடீரென்று சமீபத்தில் இருவரும் வெளிநாடு சென்று ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அதேபோல் கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் இந்தி நடிகை சாகரிகா காடேஜ் என்பவரை சமீபத்தில் காதலித்து மணந்தார். அந்த வரிசையில் தற்போது இளம் கிரிக்கெட் வீரர் ஹர்த்திக் பாண்டியா காதல் வலையில் விழுந்திருக்கிறார்.

இந்தியில் போஸ்டர் பாய்ஸ், நாம் சபானா போன்ற படங்களில் நடித்ததுடன் தற்போது தமிழில் உருவாகும் பாரிஸ் பாரிஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் எல்லி அர்ராம் உடன் டேட்டிங் செய்வதுடன் காதலித்து வருகிறார் ஹர்திக். அவ்வப்போது இதுபற்றி கிசுகிசுக்கள் வந்தபோது அதை இருவரும் மறுத்து வந்தனர். சமீபத்தில் ஹர்த்திக்கின் மூத்த சகோதரர் கிருணால் பாண்டியா திருமணம் நடந்தது.

தனது நீண்ட நாள் கேர்ள் பிரண்ட் பன்க்ஹுரி ஷர்மாவை மணந்தார். அதில் ஹர்த்திக் தனது காதலி எல்லியுடன் ஜோடியாக கலந்துகொண்டார். மணமக்கள் அருகில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது எல்லியின் இடுப்பில் கைவைத்து தன் அருகில் அவரை சேர்த்து அணைத்துக் கொண்டு நின்றார் ஹர்த்திக். ‘இருவரும் காதலிக்கிறீர்களா?’ என்று எல்லியிடம் கேட்டபோது,’பிரபலங்களை கிசுகிசுக்கள் பின்தொடர்வது வழக்கம். எதற்காக அதற்கு நான் விளக்கம் தர வேண்டும். இதுபோன்ற வதந்திகளை தடுக்க முடியாது’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பணம் கொடுக்காததால் தாயிடமிருந்து 5 மாதமாக குழந்தையை பிரித்து வைத்த வைத்தியசாலை!!
Next post நடிகை ஸ்ரேயா திருமண கிசுகிசு வலுக்கிறது !!