இயக்குனர்களை கவர சனாகான் புது முயற்சி!!

Read Time:1 Minute, 49 Second

தமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் சனா கான். கோலிவுட்டில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட்டிற்கு சென்றார். அங்கும் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சல்மான் கானுடன் நட்பு பாராட்டத் தொடங்கினார். அவருடன் நெருக்கமாக பழகியதற்கு பலன் கிடைத்தது.

தான் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சனா கானுக்கு வாய்ப்பு தந்ததுடன் தனது படத்திலும் நடிக்க வாய்ப்பு தந்தார். ஆனாலும் சனாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வரவில்லை. இதற்கிடையில் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். தனது தம்பியுடன் சேர்ந்து இளம் பெண்ணை கடத்தியதாக சனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் சில காலம் தலைமறைவாக இருந்தார்.

சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் மீண்டும் இயக்குனர்கள் கவனத்தை கவர எண்ணினார் சனா. சமீபத்தில் கவர்ச்சியான போட்டோ செஷன் நடத்தி அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைய தளத்தில் தவழ விட்டதுடன் இயக்குனர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறார். சனாவின் புதுமுயற்சி பலன்தருமா என்பது போகபோகத்தான் தெரியும் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிப்பர் வாகனத்துடன் வேன் மோதியதில் சிறுமி பலி!!
Next post காதல் திருமணம் பிடிக்காததால் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட தந்தை! !