சினிமாவில் நடிப்பது மட்டும்தான் என் வேலையா? ஸ்ருதிஹாசன் கடும் கோபம்!!

Read Time:1 Minute, 40 Second

தன்னையும், பாய் பிரெண்ட் மைக்கேல் கார்சலையும் இணைத்து வரும் திருமண வதந்திகளை அறிந்து ஸ்ருதிஹாசன் கடும் கோபம் அடைந்துள்ளார். அவர் கூறியது: என் சொந்த வாழ்க்கையில் நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. எனவே, தயவுசெய்து என் திருமணத்தையும், சினிமாவையும் இணைத்துப் பேசாதீர்கள். சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டேனா என்று கேட்கிறார்கள்.

இப்போது என் தந்தை கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறேன். மேலும் சில படங்களில் நடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தவிர, சினிமாவில் நடிப்பது மட்டும்தான் என் வாழ்க்கையா? நடிப்பையும் தாண்டி மற்ற வேலைகள் எனக்கு இருக்கக்கூடாதா?

என் வாழ்க்கை சினிமா மட்டுமன்றி, வேறு பல விஷயங்களுடனும் இணைந்திருக்கிறது. எனவே, சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, திருமணத்துக்குத் தயாராகி விட்டேன் என்று பேசாதீர்கள். இசை சம்பந்தமாகவும் நிறைய யோசித்து வைத்திருக்கிறேன். நான் பாடகி, பாடல் எழுதுபவள், நடனம் ஆடுபவள் என பன்முகம் கொண்டவள் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனதுக்கும் தேவை முதல் உதவி!!
Next post தீண்டும் இன்பம்!!