காதல் திருமண எண்ணத்துடன் நடிக்கும் ஹீரோயின்!!

Read Time:2 Minute, 12 Second

மாடலிங் துறையிலிருந்து நிறையவே நடிகைகள் வந்திருக்கின்றனர். அந்த வரிசையில் யுவன் சங்கர்ராஜா தயாரிக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ரைசா. இவர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் கஜோல் உதவியாளராக நடித்திருந்தார். சினிமா அனுபவம்பற்றி ரைசாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: பெங்களூர்தான் எனது சொந்த ஊர். பி.காம் பட்டதாரியான எனக்கு மாடலிங் துறையில் ஆர்வம் இருந்தது.

சென்னை, ஐதராபாத், கேரளா என பல ஊர்களுக்கு சென்று மாடலிங் செய்து வருவதுடன் சுமார் 500 விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். நடிகை ஆக வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் என் குடும்பத்தில் யாரும் இந்த துறையில் இல்லை. அதேசமயம் படங்களில் நடிக்க அவசரப்படவில்லை. யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரீஸ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறேன். நடிகையாக என்னை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

முன்னதாக வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் கஜோல் உடன் நடித்தேன். அதுவொரு புது அனுபவமாக இருந்தது. காதல் திருமணம்பற்றி கேட்கிறார்கள். காதல் அற்புதமானது. ஆனால் எனக்குதான் அந்த அதிர்ஷ்டம் இல்லை என்று எண்ணுகிறேன். கல்லூரியில் படித்தபோது ஒரு காதல் வந்தது. அது வெற்றி பெறவில்லை. ஆனால் நிச்சயம் காதல் திருமணம்தான் செய்வேன். அது எப்போது நடக்கும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. இவ்வாறு ரைசா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள்!!
Next post பணம் கொடுக்காததால் தாயிடமிருந்து 5 மாதமாக குழந்தையை பிரித்து வைத்த வைத்தியசாலை!!