வெள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கை!!

Read Time:3 Minute, 57 Second

சமீபத்திய மழை, வெள்ளத்தை எல்லோரும் சபித்துக் கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தைக் குறை சொல்வதற்கு முன் ஒவ்வொரு தனி மனிதரும் தன் வீட்டிலிருந்து தொடங்க வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கை என ஏதேனும் உண்டா?

சூழலியல் ஆர்வலர் முகமது

பயோடைவர்சிட்டி என்பது வெறும் மரம், செடி, கொடிகள் மட்டுமின்றி, புல், நிலத்தடி நீர் என எல்லாம் சம்பந்தப்பட்டது. முன்பெல்லாம் வீட்டுக்கு முன்பும் வீட்டைச் சுற்றியும் மரங்கள் இருக்கும். உயரமான கட்டிடங்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கும். எல்.ஐ.சி. கட்டிடத்தை உயரமானதாக மாய்ந்து பார்த்த காலம் மாறி, இன்று பசுமையைப் பார்க்க முடியாதபடி எங்கெங்கும் உயரமான வீடுகள், கட்டிடங்கள்… எதுவும் முறைப்படி கட்டப்படுவதில்லை.

மலைகள், முள் காடுகள் என எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. அதிகப்படியான கட்டிடங்கள்… தொழிற்சாலைகள் என வந்ததும், நல்ல தண்ணீர் போக வேண்டிய இடங்களில் கழிவு நீர் செல்கிறது. மனிதர்களைப் போலவே வீடுகளும் சுவாசிக்கும் என்பது தெரியுமா? வீடுகள் சூடான காற்றை வெளித்தள்ளக்கூடியவை. அதற்கு வழியே இல்லாமல், இன்று இடைவெளிகளே விடாமல் வீடுகள் கட்டுகிறோம்.

இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் காற்றுக்கூட புக முடியாத அளவுக்கு நெருக்கம். அது மட்டுமா? கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்துகிற பொருட்களில் உள்ள ரசாயனக் கலப்பின் விளைவாக, பூமியின் தண்ணீரை கிரகித்துக் கொள்ளும் திறன் குறைகிறது.அடுத்தது அழிவில்லாதது எனத் தெரிந்தும் நாம் உபயோகிக்கிற பிளாஸ்டிக். 91க்குப் பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.

இந்த முறை சென்னை சந்தித்த வெள்ளப் பேரழிவின் பின்னணியில் இந்த பிளாஸ்டிக் கழிவுகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. இதற்கு முன்பும் சென்னை எத்தனையோ பெரிய மழை, வெள்ளத்தை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் தண்ணீர் உடனுக்குடன் வடிந்திருக்கிறது. இந்த முறை சின்ன மழைக்குக்கூட தண்ணீர் தேங்கக் காரணம் அழிவில்லாத பிளாஸ்டிக் குப்பைகள்தான்.

மண்புழுவைப் பார்க்க முடிவதில்லை. சாக்கடைகளைத் தூர்வாறாமல் கான்கிரீட் போன்று மூடுகிறோம். இப்படி வருடக் கணக்கில் மூடப்பட்டே வைத்திருக்கிற சாக்கடைகளின் மேலுள்ள உலோக மூடியானது ஒரு கட்டத்தில் பட்டாசு மாதிரி மேலே பறந்து வெடித்துச் சிதறும். காரணம் சாக்கடைக்குள் உருவான மீத்தேன் வாயு. இனி வரும் காலங்களில் இயற்கையின் சீற்றங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள சில அடிப்படை விஷயங்களை இப்போதிலிருந்தாவது பின்பற்ற வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 30.!!
Next post மிருதுவான கூந்தல் கிடைக்க உதவும் ரோஜா இதழ் தெரபி!!