கார் சக்கரத்தில் தலைமுடி சிக்கி பெண் மரணம்!!

Read Time:2 Minute, 2 Second

அரியானா மாநிலம், பதிண்டா பகுதியைச் சேர்ந்த புனீத் கவுர் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று (14) பிஜ்னோரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றார். அங்கு இருந்த கோ-கார்ட் எனப்படும் சிறிய அளவிலான காரில் பயணம் செய்ய அனைவரும் முடிவு செய்தனர். புனீத் தனது கணவருடன் ஒரு காரில் பயணித்தார்.

சிறிது தூரம் சென்ற பிறகு புனீத்தின் தலைமுடி சக்கரத்தில் சிக்கியது. கார் மிக வேகமாக சென்றதால் அவரால் முடியை எடுக்க முடியவில்லை. அவரின் அலறல் சத்தம் கேட்டு காரை நிறுத்துவதற்குள் புனீத்தின் தலைமுடியுடன் கூடிய தோல் பகுதி தனியாக பெயர்ந்து ரத்தம் கொட்டியது.

படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்த பூங்கா உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என புனீத்தின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். தலைக்கவசம் அணிந்திருந்தும் அவர் முடி சக்கரத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பேசிய பூங்கா அதிகாரி கூறுகையில், ´அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்த பிறகே வாடிக்கையாளர்கள் காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதையும் மீறி இந்த விபத்து நடந்துள்ளது´ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாயின் எலும்புக் கூடு!!
Next post ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…!!