மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாயின் எலும்புக் கூடு!!

Read Time:2 Minute, 14 Second

நான்கு பிள்ளைகளின் தாயொருவரின் எலும்புக் கூடொன்று பாழடைந்த வீடொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

இது மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்த பெண்ணின் எலும்புக் கூடென்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்து எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது ராஜபக்ஸ முதியன்சலாகே குசுமாவத்தி வயது 79 என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்மணி தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், முதியோர் கொடுப்பனவு பெற வராததையடுத்து உறவினர்கள் அந்த வீட்டுக்கு சென்று கதவை திறந்து பாரத்த போது அவர் கட்டிலிலேயே உயிரிழந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளாரா என்பது தொடர்பாக நோட்டன் பொலிஸாரும், ஹட்டன் கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இயற்கையான முறையில் உடலழகைப் பேண சில குறிப்புகள்!!
Next post கார் சக்கரத்தில் தலைமுடி சிக்கி பெண் மரணம்!!